IND vs NZ : 507 நாட்கள் கழித்து விமர்சனங்களை நொறுக்கிய ரோஹித் சர்மா – ரிக்கி பாண்டிங் சாதனை சமன், கொண்டாடிய கோலி

Rohit sharma
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய நியூசிலாந்தை சுப்மன் கில், சிராஜ் உள்ளிட்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் அற்புதமான ஆட்டத்தால் மண்ணை கவ்வ வைத்த இந்தியா ஜனவரி 24ஆம் தேதியன்று துவங்கிய சம்பிரதாய கடைசிப் போட்டியில் விளையாடி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய அந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு தற்சமத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே சுமாராக பந்து வீசிய நியூசிலாந்து பவுலர்களை வழக்கம் போல அதிரடியாக எதிர்கொண்டனர். பவர் பிளே ஓவர்களில் அதிரடியான பவுண்டர்களை பறக்க விட்டு விரைவாக ரன்களை குவித்த இந்த ஜோடி ஆரம்பம் முதலே 7க்கும் மேற்பட்ட ரன் ரேட்டில் பேட்டிங் செய்து 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

பார்முக்கு திரும்பிய ஹிட்மேன்:
அதனால் இவர்களை பிரிப்பதற்காக நியூசிலாந்து போட்ட அத்தனையும் திட்டங்களையும் தவிடு பொடியாக்கி இருவருமே அரை சதம் கடந்து இந்த ஜோடியில் சமீப காலங்களில் சதமடிக்க முடியாமல் இருப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆரம்பம் முதலே சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா சதத்தை நெருங்கினார். அவருக்கு போட்டியளிக்கும் வகையில் எதிர்ப்புறம் அவரை விட அற்புதமான பார்மில் இருக்கும் சுப்மன் கில்லும் வேகமாக செயல்பட்டு சதத்தை நெருங்கியதால் இருவரில் முதலில் சதமடிக்கப் போவது யார் என்ற போட்டி ஏற்பட்டது.

அந்த வேகத்தில் இந்தியா 200 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மேலும் வலுவான நிலையில் 9 பவுண்டரி 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா முதலாவதாக 83 பந்துகளில் சதமடித்த போது ஒட்டுமொத்த இந்திய அணியினரும் ரசிகர்களும் அதை மகிழ்ச்சியாக கொண்டாடினர். குறிப்பாக கடைசியாக கடந்த 2020 ஜனவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்திருந்த அவர் ஒருவழியாக 3 வருடங்கள் கழித்து 507 நாட்கள் கழித்து தன்னுடைய 30ஆவது சதத்தை விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 3வது வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையும் அவர் சமன் செய்தார். அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 49
2. விராட் கோலி : 46
3. ரோஹித் சர்மா : 30*
3. ரிக்கி பாண்டிங் : 30
4. சனாத் ஜெயசூரியா : 28

- Advertisement -

அதனால் மிகவும் நிம்மதி அடைந்த அவர் அடுத்த ஓவரிலேயே 101 (85) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறும் அபார பேட்டிங் செய்த சுப்மன் கில் அவருக்கு பின்னாலயே 13 பவுண்டரி 5 சிக்ஸருடன் அவரை விட வேகமாக சதமடித்து 112 (78) ரன்கள் விளாசி அவுட்டானார். அந்த வகையில் 212 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்த அந்த ஜோடிக்கு பின் விராட் கோலி விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: IND vs NZ : அம்பயர்களின் புண்ணியத்தால் தடையில் இருந்து தப்பிய இஷான் கிஷன் – என்ன நடந்தது?

முன்னதாக சமீப காலங்களாகவே இதுபோல பவர் பிளே ஓவர்களில் பவுண்டரிகளை பறக்க விட்டு அதிரடியான வேகத்தில் ரன்களை குவித்த ரோஹித் சர்மா 30, 40, 70, 80 போன்ற ரன்களை தொடர்ந்து எடுத்த போதிலும் 3 இலக்க ரன்களை தொட முடியாமல் தவித்தார். குறிப்பாக 3 வகையான கிரிக்கெட்யையும் சேர்த்து 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்த அவரை கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இருப்பினும் அணி வெற்றி பெறும் அளவுக்கு போதுமான ரன்களை குவிப்பதே மகிழ்ச்சி என்றும் விரைவில் சதமடிப்பேன் என்றும் கடந்த போட்டியில் தெரிவித்த ரோகித் சர்மா இப்போட்டில் அதை செய்து காட்டி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கி உலகக் கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement