IND vs NZ : அம்பயர்களின் புண்ணியத்தால் தடையில் இருந்து தப்பிய இஷான் கிஷன் – என்ன நடந்தது?

Ishan-Kishan-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜனவரி 18-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் செய்த செயல் ஒன்று தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Siraj

அதேவேளையில் அவருக்கு 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட இருந்த வேளையில் அந்த தடையிலிருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அந்த முதலாவது போட்டியின் போது இந்திய அணியின் வீரர் ஹார்டிக் பாண்டியா பேட்டிங் செய்கையில் பந்து ஸ்டம்பில் படாமல் நியூசிலாந்து அணியின் கீப்பர் டாம் லேதம் கையால் பெயில்ஸை தட்டி விட்டு அவர் ஆட்டம் இழந்ததாக வெளியேற்றப்பட்டார். அந்த சம்பவம் அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது.

Ishan Kishan

இந்நிலையில் அந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்கையில் டாம் லேதம் பந்தை அடித்த பிறகும் அவர் தன் கையால் பெயில்ஸை தள்ளிவிட்டு அம்பயரிடம் அவுட் கேட்டார். பின்னர் களத்தில் இருந்த அம்பயரும் மூன்றாவது அம்பயரின் உதவியை நாட பின்னர் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி எந்த ஒரு சம்பந்தமுமே இல்லாமல் அம்பயரின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் தேவையின்றி அவுட் என்று முறையிட்ட இஷான் கிஷனின் இந்த செயலானது ஐசிசி விதிமுறை மீறியதாக இருந்தது. இதன் காரணமாக ஐ.சி.சி விதிமுறைப்படி அவருக்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதையும் படிங்க : IND vs NZ : 3 ஆவது போட்டியில் யாரும் எதிர்பாக்காத 2 மாற்றங்களை செய்து ரோஹித் சர்மா – இந்திய அணி முதலில் பேட்டிங்

ஆனால் களத்தில் இருந்த நடுவர்களோ, மூன்றாவது நடுவரான ஸ்ரீநாத்தோ இது குறித்து எந்த ஒரு புகாரையும் ஐ.சி.சி-யிடம் முன்வைக்கவில்லை. இதன் காரணமாக இஷான் கிஷன் அம்பயர்களின் புண்ணியத்தால் தடையில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement