IND vs NZ : 3 ஆவது போட்டியில் யாரும் எதிர்பாக்காத 2 மாற்றங்களை செய்து ரோஹித் சர்மா – இந்திய அணி முதலில் பேட்டிங்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது.

Rohit sharma IND vs NZ

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்துள்ளது. அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது.

அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் ஒரு கவுரவமான வெற்றியையாவது பெற வேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணியும் களம் காண்கிறது. இதன் காரணமாக இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Umran-Malik

ஆனால் யாரும் எதிர்பார்க்காத இரண்டு மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் நிகழ்த்தியுள்ளார். அதன்படி கடந்த போட்டியின் முடிவிலேயே ரோகித் சர்மா கூறியது போன்று இந்த மூன்றாவது போட்டியில் பணிச்சுமை காரணமாக முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து வேறுயெந்த மாற்றமும் பிளேயிங் லெவனில் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இரட்டைசதம் அடிச்சாச்சுன்னு மெதப்பில் இருக்காதீங்க. கில் மற்றும் இஷான் கிஷனை எச்சரித்த – சுனில் கவாஸ்கர்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) இஷான் கிஷன், 5) சூரியகுமார் யாதவ், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) உம்ரான் மாலிக்.

Advertisement