8வது முறையாக ஏமாற்றிய ரோஹித்.. 18 இன்னிங்ஸ் கழித்து அதிர்ஷ்டத்துடன் மூச்சுவிட்ட கில்.. போராடும் இந்தியா

IND vs ENG hh
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மோதி வருகின்றன. முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 396 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட மற்ற வீரர்கள் யாருமே 35 ரன்கள் கூட எடுக்கவில்லை.

இருப்பினும் தனி ஒருவனாக அசத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து சார்பில் ரீகன் அகமது, சோயப் பசீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தும் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பின்னடைவை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

போராடும் இந்தியா:
அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

சர்வதேச கிரிக்கட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் கேரியரிலேயே முதல் முறையாக தொடர்ச்சியாக 8 டெஸ்ட் இன்னிங்ஸில் அவர் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2014ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 7 டெஸ்ட் இன்னிங்ஸில் ரோகித் சர்மா சிக்சர்கள் அடிக்காததே முந்தைய தடுமாற்றமான செயல்பாடாகும்.

- Advertisement -

அதே போல முதல் இன்னிங்ஸில் அசத்திய ஜெய்ஸ்வால் இம்முறை 17 ரன்களில் ஆண்டரசன் வேகத்தில் வீழ்ந்தார். அப்போது விமர்சனத்திற்குள்ளாகி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவை மீட்டெடுக்க முயற்சித்தனர். அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சரிவை சரி செய்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் அபார கேட்ச்சால் மீண்டும் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

இதையும் படிங்க: ஒரே ஆளா நின்னு இங்கிலாந்து மிடில் ஆர்டரை கிழித்துவிட்டார்.. இந்திய வீரருக்கு பாராட்டினை தெரிவித்த – அலைஸ்டர் குக்

அப்போது வந்த அறிமுக வீரர் ரஜத் படிதாரும் 9 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடும் கில் முக்கிய நேரத்தில் எல்பிடபுள்யூ முறையில் கொடுக்கப்பட்டார். அதை ரிவ்யூ செய்ததால் தப்பிய அவர் அதிர்ஷ்டத்துடன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 60* ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 18 இன்னிங்ஸ் கழித்து அரை சதமடித்து மூச்சு விட்டுள்ள அவர் தன்னுடைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் 3வது நாள் உணவு இடைவெளியில் 130/4 ரன்கள் எடுத்துள்ள இந்தியா 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement