ஒரே ஆளா நின்னு இங்கிலாந்து மிடில் ஆர்டரை கிழித்துவிட்டார்.. இந்திய வீரருக்கு பாராட்டினை தெரிவித்த – அலைஸ்டர் குக்

Cook
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணியானது அதற்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 396 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியும் பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 253 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதன் காரணமாக இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா திகழ்ந்தார்.

இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 15.5 ஓவர்கள் வீசியிருந்த பும்ரா வெறும் 45 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக ஜோ ரூட், ஒல்லி போப், பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்திய விதம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலைஸ்டர் குக் பும்ராவை பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கண்மூடி திறப்பதற்குள் பும்ரா தனி வீரராக இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பி விட்டார். இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக இன்னிங்சை ஆரம்பித்திருந்தாலும் மிடில் ஆர்டரில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்.

இதையும் படிங்க : 209 ரன்ஸ்.. வாழ்வா – சாவா போட்டியில் கெத்து காட்டிய ஜேஎஸ்கே.. 2010 சிஎஸ்கே போல மாஸ் சம்பவம்

குறிப்பாக இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டரை தனி ஆளாக அவரே காலி செய்து விட்டார். என்னுடைய கரியரிலும் நான் அவருக்கு எதிராக விளையாடி இருக்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட பவுலிங்கை அப்போது அவர் வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால் தற்போது பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரது பவுலிங் ஸ்டைல் மற்றும் பந்துவீசும் ஆங்கிள் என அனைத்துமே பேட்மன்களுக்கு மிக கடினமாக உள்ளது. அதனால் தான் அவர் இவ்வளவு ஒரு வெற்றிகரமான பந்துவீச்சாளராக திகழ்கிறார் என அலைஸ்டர் குக் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement