209 ரன்ஸ்.. வாழ்வா – சாவா போட்டியில் கெத்து காட்டிய ஜேஎஸ்கே.. 2010 சிஎஸ்கே போல மாஸ் சம்பவம்

- Advertisement -

தென்னாபிரிக்காவில் ஐபிஎல் போல எஸ்ஏ20 எனும் பெயரில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நிர்வகிக்கும் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றி 5 தோல்விகளை பதிவு செய்து பெரிய பின்னடைவை சந்தித்தது.

அதன் காரணமாக பிளே ஆஃப் தகுதி பெற வேண்டுமெனில் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஜேஎஸ்கே களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் வாண்ட்ரஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய டர்பன் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 203/6 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மாஸ் சம்பவம்:
அந்த அணிக்கு பிரட்ஸ்கே 9, டீ ஜோர்சி 15, ட்வயன் பிரிட்டோரிஸ் 7 என்ன டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 32/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் ஜேஜே ஸ்மட்ஸ் அதிரடியாக 55 (34), முல்தர் 59 (40), ஹென்றிச் க்ளாஸென் முரட்டுத்தனமாக 40 (16) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர்.

ஜேஎஸ்கே சார்பில் அதிகபட்சமாகி லிசார்ட் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 204 ரன்களை சேசிங் செய்த ஜேஎஸ்கே அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் டு பிளாய் ஆகியோர் ஜோடி சேர்ந்து பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 9 ஓவரில் 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் கேப்டன் டு பிளேஸிஸ் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (29) ரன்களில் அவுட்டானர்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த வெயின் மேட்சன் அதிரடி காட்டிய நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடி வந்த டு பிளாய் 57 (47) ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த மொயின் அலியும் அதிரடி காட்டியதால் வெற்றியை நெருங்கிய ஜேஎஸ்கே அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. ட்வயன் பிரிட்டோரிஸ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மொய்ன் அலி அடுத்த பந்தில் 26 (12) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த டோனோவான் ஃபெராரியா அடுத்த 3 பந்துகளில் 6, 2, 6 ரன்களை விளாசி அபாரமான ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19.5 ஓவரில 209/3 ரன்கள் எடுத்த ஜேஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது. அதனால் நூர் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்கள் எடுத்தும் டர்பன் அணி போராடி தோற்றது. மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியில் கடைசி ஓவரில் மாஸ் வெற்றி பெற்ற ஜேஎஸ்கே 10 போட்டிகளில் வெறும் 3 வெற்றிகளை மட்டுமே வைத்து 17 புள்ளிகளுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

இதையும் படிங்க: போதும் நிறுத்துங்க.. இப்படி சொல்லியே அவரோட சோளிய முடிச்சுறாதீங்க.. கம்பீர் அதிரடி பேட்டி

குறிப்பாக கடந்த 2010 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் கடைசி நேரத்தில் தோனி அபாரமான ஃபினிஷிங் கொடுத்ததால் சிஎஸ்கே 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே போலவே இத்தொடரில் ஜேஎஸ்கே அணியும் 4வது அணியாக கடைசி நேரத்தில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement