போதும் நிறுத்துங்க.. இப்படி சொல்லியே அவரோட சோளிய முடிச்சுறாதீங்க.. கம்பீர் அதிரடி பேட்டி

Gautam Gambhir
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 396 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹன் அஹமத் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்தும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

கம்பீர் கோரிக்கை:
அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 28/0 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை விட 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வகையில் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அனுபவமிக்க கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 ரன்கள் கூட தாண்டவில்லை. ஆனால் வெறும் 22 வயதில் அதே பிட்ச்சில் அபாரமாக விளையாடி 209 ரன்கள் விளாசி இந்தியாவை காப்பாற்றிய அவர் சேவாக் போல 50, 100, 150, 200 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்சரை பறக்க விட்டு தொட்டார்.

- Advertisement -

அதனால் வழக்கம் போல ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சேவாக் போல வருவார், அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது போல ஜெய்ஸ்வாலை பாராட்டி அழுத்தத்தை உண்டாக்கி அவரின் கேரியரை முடித்து விடாதீர்கள் என்று கௌதம் கம்பீர் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த சாதனைக்காக அந்த இளம் வீரரை நான் வாழ்த்த விரும்புகிறேன். அதை விட முதலில் அந்த இளம் வீரரை விளையாட விடுங்கள் என்று நான் அனைவரிடமும் சொல்ல விரும்புகிறேன்”

இதையும் படிங்க: பேசமா ஸ்ரேயாஸ், கில்லுக்கு பதிலா இவருக்கு சான்ஸ் கொடுக்கலாம்.. 409 ரன்ஸ்.. இந்தியா ஏ அணியை தூக்கிய சுதர்சன்

“இந்தியாவில் குறிப்பாக ஊடகங்கள் அவரைப் போன்ற வீரர்களின் சாதனைகளை மிகைப்படுத்தி அவர்களுக்கு பட்டங்கள் கொடுத்து ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை வைத்திருப்பதை கடந்த காலங்களில் பார்த்தோம். அப்படி எதிர்பார்ப்பு ஏற்படும் போது வீரர்கள் தங்களுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுத்தத்தை சந்திக்கிறார்கள். எனவே அவரை கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடி வளர விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement