பேசமா ஸ்ரேயாஸ், கில்லுக்கு பதிலா இவருக்கு சான்ஸ் கொடுக்கலாம்.. 409 ரன்ஸ்.. இந்தியா ஏ அணியை தூக்கிய சுதர்சன்

Sai Sudharsan 117
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன. அதை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகளும் அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் இந்தியா ஏ வென்றது. அதை தொடர்ந்து அகமதாபாத் நகரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன் பின் களமிறங்கிய இந்தியா ஏ அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 65, சரன்ஸ் ஜெயின் 64 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக மேத்யூ போட்ஸ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் ஒரு கட்டத்தில் 113/1 என்ற நல்ல துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் சுதாரிப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் அந்த அணியை 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.

- Advertisement -

அசத்திய சுதர்சன்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக அலெஸ் லீஸ் 64 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 4, யாஷ் தயாள் 3 விக்கெட்களை சாய்த்தனர். அதன் பின் 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 22, தேவ்தூத் படிக்கல் 21, திலக் வர்மா 46, ரிங்கு சிங் 38, குமார் குஷ்காரா 40 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல துவக்கத்தை பெற்றும் பெரிய ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் எதிர்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுதர்சன் சதமடித்து 16 பவுண்டரியுடன் 117 (240) ரன்கள் குவித்து அவுட்டானார். அந்த வகையில் சமீப காலங்களாகவே டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன் சமீபத்திய தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அத்தொடரில் அரை சதமடித்து நன்றாகவே செயல்பட்ட அவர் தற்போது இப்போட்டியிலும் அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதை பார்க்கும் தமிழக ரசிகர்கள் பேசாமல் சீனியர் அணியில் சொதப்பும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இறுதியில் அவருடன் சரன்ஸ் ஜெயின் 63, ஆகாஷ் தீப் 31 ரன்கள் எடுத்ததால் இந்தியா ஏ தங்களுடைய 2வது இன்னிங்ஸில் 409 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து லயன்ஸ் சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் கால்ஸ் 3, டான் மௌஸ்லி 3 விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படிங்க: பாவம் இப்படியா ஆகணும்.. 2023 உ.கோ போல மேத்தியூஸை விடாமல் துரத்தும் சோகமான பரிதாபம்

அதைத்தொடர்ந்து 403 என்ற கடினமான இலக்கை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 83/2 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 27, ஓலிவர் ப்ரைஸ் 11 ரன்களில் சரன்ஸ் ஜெயின் சுழலில் அவுட்டானார்கள். களத்தில் அலெஸ் லீஸ் 41*, மேத்தியூ பிஷர் 1* ரன்களுடன் இருந்தாலும் கைவசம் 8 விக்கெட்டுகளை மட்டுமே வைத்துள்ள அந்த அணி இன்னும் 320 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளதால் இந்தியா ஏ வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement