பாவம் இப்படியா ஆகணும்.. 2023 உ.கோ போல மேத்தியூஸை விடாமல் துரத்தும் சோகமான பரிதாபம்

Angelo Matthews
- Advertisement -

இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி கொழும்புவில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 91 ரன்கள் எடுத்தார்.

இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ 3, விஸ்வா பெர்னான்டோ 4, பிரபத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை சொந்த மண்ணில் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரண்டாவது நாள் முடிவில் 410/6 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானை விட 212 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. அந்த அணிக்கு நிஷான் மதுசங்கா 37, கருணரத்னே 77, குசால் மெண்டிஸ் 10 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

துரத்தும் பரிதாபம்:
அதை விட மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஏஞ்சேலோ மேத்தியூஸ் – தினேஷ் சண்டிமல் ஆகியோர் நிதானமாக விளையாடி சதமடித்தனர். அதில் சண்டிமால் 107 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஏஞ்சுலோ மேத்யூஸ் 141 ரன்கள் குவித்து நன்கு செட்டிலானார். அப்போது நிறைவுக்கு வந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் காய்ஸ் அஹமத் வீசிய கடைசி ஓவரை மேத்தியூஸ் எதிர்கொண்டார்.

இருப்பினும் சற்று ஒய்ட் போல வந்த அந்த பந்தை லெக் சைட் திசையில் ஒதுங்கி அடித்த அவர் அட்டகாசமான பவுண்டரியை பறக்க விட்டார். அவர் கொடுத்த பவரில் பந்தும் பவுண்டரிக்கு சென்றது. ஆனால் ஒதுங்கி வந்து முட்டி போட்டு பந்தை இழுத்து அடித்ததன் காரணமாக பேலன்ஸை இழந்த அவருடைய பேட் அவரை அறியாமலேயே ஸ்டம்ப்பில் அடித்தது.

- Advertisement -

அதனால் பந்து பவுண்டரிக்கு சென்றும் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டான மேத்யூஸ் அதை நம்ப முடியாமல் களத்தில் சோகத்துடன் அமர்ந்து பின்னர் பரிதாபத்துடன் வெளியேறினார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் இப்படி அவுட்டானது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 2023 ஐசிசி உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய வந்த அவர் கடைசி நேரத்தில் ஹெல்மெட் பழுதாக இருந்ததைப் பார்த்து அதை மாற்ற முயற்சித்தார்.

இதையும் படிங்க: சக வீரர்களை களத்தில் வைத்து மோசமாக திட்டிய ரோஹித் சர்மா.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வார்த்தை

அப்போது வேண்டுமென்றே தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேசம் அணியினர் அவரை டைம்ட் அவுட் முறையில் மனசாட்சியின்றி அவுட்டாக்கியது பெரிய சர்ச்சையாக மாறியது. மறுபுறம் ஹெல்மெட் பழுதாக இருந்ததை கவனிக்க தவறிய மேத்யூஸ் அஜாக்கிரதையால் காலதாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார். அதே போன்ற பரிதாபம் அந்த போட்டியிலும் அவருக்கு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement