இங்கிலாந்து தொடரில் விராட் கோலி விலக காரணம் இது தான்.. ரகசியத்தை வெளியிட்ட ஏபிடி

Ab De Villiers
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஏற்கனவே முகமது ஷமி போன்ற சில முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் சொந்த காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஏனெனில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா 190 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் 2வது இன்னிங்ஸில் வெறும் 231 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

உண்மையான காரணம்:
அதனால் ஒருவேளை அந்த நேரத்தில் விராட் கோலி இருந்திருந்தால் தன்னுடைய அனுபவத்தையும் கிளாஸையும் பயன்படுத்தி நங்கூரமாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார் என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் ஒருவேளை அப்போட்டியில் விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்காது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மிகவும் முக்கிய வீரரான விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகியதால் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் யாரும் அவரை தொல்லை செய்து தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முயற்சிக்க வேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதற்கிடையே தம்முடைய தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலேயே விராட் கோலி அவசரமாக விலகியதாக செய்திகள் வெளியானது. இருப்பினும் அது உண்மையல்ல என்று விராட் கோலியின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மறுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் தம்முடைய இரண்டாவது குழந்தை விரைவில் பிறக்க உள்ளதால் தன்னுடைய மனைவியுடன் இருக்க வேண்டும் என்று கருதியே விராட் கோலி இத்தொடரின் முதலிரண்டு போட்டியில் விளையாடவில்லை என்று ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். யாரும் அறியாத அந்த ரகசியத்தை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க: சக வீரர்களை களத்தில் வைத்து மோசமாக திட்டிய ரோஹித் சர்மா.. ஸ்டம்ப் மைக்கில் பதிவான வார்த்தை

“ஆம். அவருடைய இரண்டாவது குழந்தை விரைவில் பிறக்க உள்ளது. எனவே இது குடும்பத்திற்கான நேரமாகும். அதுவும் அவருக்கு முக்கியம். உங்களுக்கு நீங்களே நேர்மையாக இல்லாமல் போனால் தற்போது இருப்பதை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே பெரும்பாலான மக்களின் முதன்மை முன்னுரிமையாக குடும்பம் இருக்கும். நீங்கள் விராட் கோலியை அதை வைத்து மதிப்பிட முடியாது” என்று கூறினார்.

Advertisement