ஆசிய கோப்பை 2023 : விராட் கோலியையே மிஞ்சி யோயோ டெஸ்டில் அதிக ஸ்கோர் எடுத்த இளம் வீரர் – எவ்வளவுன்னு பாருங்க

Shubman Gill Ishan Kishan
- Advertisement -

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தம்முடைய முதல் போட்டியில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. விரைவில் தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக்கோப்பைக்கு தயாராவதற்கு உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தை சந்தித்திருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Virat Kohli YOYO

- Advertisement -

அதே போல ஏற்கனவே காயத்தை சந்தித்திருந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக குணமடைந்து அயர்லாந்து டி20 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த நிலைமையில் இலங்கை செல்வதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் ஏன்சிஏவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினருக்கு உடல் தகுதி தேர்வு சோதனை நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக கிரிக்கெட்டில் இருப்பதிலேயே மிகவும் கடினமானதாக பார்க்கப்படும் யோயோ டெஸ்டில் அனைத்து வீரர்களும் உட்படுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஃபிட்னெஸ் கில்லி:
அதில் முதலாவதாக கடந்த பல வருடங்களாகவே உலக அரங்கில் ஃபிட்னஸ் எனும் வார்த்தைக்கு சிறந்த அடையாளமாக திகழும் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ச்சி பெற்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் ஆளாக வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். குறிப்பாக 16.5க்கு 17.2 மதிப்பெண் எடுத்ததாக தெரிவித்த அவருடைய ஃபிட்னஸ் பற்றி ரசிகர்கள் வியந்து பாராட்டிய நிலையில் ரோஹித் சர்மா போன்றவர்களின் மதிப்பெண்களையும் வெளியிட வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

Virat-Kohli

இருப்பினும் மத்திய சம்பள ஒப்பந்தப்படி அணிக்குள் நகடக்கும் தகவல்களை வெளியே அப்படி பகிரக்கூடாது என்பதால் விராட் கோலிக்கு பிசிசிஐ எச்சரிக்கை கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அந்த யோயோ சோதனையில் அனைத்து இந்திய வீரர்கள் பங்கேற்று முடித்து தேர்ச்சிகள் பெற்று விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த சோதனையிலேயே மிகவும் உச்சகட்டமாக இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 16.5க்கு 18.7 என்ற அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

மிகவும் இளம் வீரராக இருக்கும் அவரும் விராட் கோலி போலவே நல்ல உடற்பயிற்சிகளை செய்து முழுமையான ஃபிட்னஸ் கடைபிடித்து வருகிறார். அதனாலேயே கடந்த ஒரு வருடமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சதங்களை அடித்து நிலையான இடத்தை பிடித்துள்ள அவர் சச்சின், விராட் கோலி ஆகியோரது வார்த்தையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்ற பாராட்டுகளையும் அனைவரிடமும் பெற்று வருகிறார். அதற்கு மற்றுமொரு சான்றாக ஃபிட்னஸ் அளவில் தற்போது விராட் கோலியையே மிஞ்சியுள்ள அவர் இந்திய அணியிலேயே மிகவும் ஃபிட்டான வீரராக தன்னை நிரூபித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:சச்சின் – தோனி ரெண்டு பேரும் ஒரே மாதிரியான மதிப்பு, மரியாதை, ஒளியை கொண்டவங்க – இந்திய வீரர் மெய்சிலிர்க்கும் பேட்டி

மேலும் இந்த சோதனையில் ரோகித் சர்மா போன்ற இதர வீரர்கள் 16.5க்கும் சமமான அல்லது சற்று அதிகமான மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. இருப்பினும் இந்த சோதனையில் காயத்திலிருந்து குணமடைந்து வரும் கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர்களுக்கு பின்னர் தனியாக சோதனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement