சச்சின் – தோனி ரெண்டு பேரும் ஒரே மாதிரியான மதிப்பு, மரியாதை, ஒளியை கொண்டவங்க – இந்திய வீரர் மெய்சிலிர்க்கும் பேட்டி

Sachin Dhoni
- Advertisement -

நட்சத்திர முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா மட்டுமல்லாது இந்த உலகமே கண்டெடுத்த மிகச் சிறந்த பேட்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஏனெனில் 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு இம்ரான் கான், வாசிம் அக்ரம், மெக்ராத், ஷேன் வார்னர், முத்தையா முரளிதரன் போன்ற உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்ட அவர் 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 சதங்களையும் அடித்த ஒரே வீரராக சரித்திரம் படைத்து 2011 உலகக் கோப்பை உட்பட இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதத்தை முதல் முறையாக அடித்தது உட்பட பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ள அவர் கிரிக்கெட் இந்தியாவில் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்து பல கோடி ரசிகர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். அப்படி அவரை ரோல் மாடலாக கொண்டு கிரிக்கெட்டின் மீதான காதலால் ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலையை விட்டு உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக விளையாடி கங்குலி தலைமையில் அறிமுகமான எம்எஸ் தோனி குறுகிய காலத்திலேயே இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டார்.

- Advertisement -

ஒரே மாதிரியான ஒளி:
மேலும் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சரித்திரம் படைத்த அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்டு பல இளம் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகிய இருவருமே ஒரே மாதிரியான மதிப்பையும் மரியாதையையும் ஒளியையும் கொண்டுள்ளதாக இந்திய வீரர் மோகித் சர்மா ஒரு ரசிகனாக வியப்புடன் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக சச்சினை போலவே தோனியையும் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் நிறைய இளம் வீரர்களின் எண்ணமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் மஹி பாய் செய்துள்ள சாதனைகள் மற்றும் ஒளி கிட்டத்தட்ட சச்சின் பாஜியை போலவே இருக்கிறது. குறிப்பாக சச்சினை நாங்கள் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணம் தோனி மீதும் ஏற்படுகிறது. குறிப்பாக தற்போதைய இளம் தலைமுறைக்கு மஹி பாய் சச்சினுக்கு நிகரான உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார்”

- Advertisement -

“அதற்கு சான்றாக போட்டிகள் முடிந்த பின் இளம் வீரர்கள் எதைப் பற்றியாவது அவரிடம் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று நினைப்பதை பாருங்கள். அந்த வகையில் எங்கே சென்றாலும் மஹி பாய் தனக்கென்று ஒரு ஒளியை எடுத்துச் செல்கிறார். குறிப்பாக நீங்கள் அதிகமாக பேசவில்லை என்றாலும் கூட அவரை சுற்றி அருகில் இருந்தாலே ஒரு நல்ல உணர்வு ஏற்படும். மேலும் நீங்கள் கேட்பதற்கு நிதர்சனமாக அவர் கொடுக்கும் விளக்கங்களை அனைத்து நேரங்களிலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதை போன்ற உணர்வு தோன்றும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மாவின் புகைப்படத்தை டிவிட்டர் கவர் இமேஜாக வைத்த பாகிஸ்தான் – வைரலாகும் போட்டோ

முன்னதாக தம்முடைய ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர் தான் என்று தோனி பல தருணங்களில் கூறியுள்ளார். அதே போல கங்குலி போன்ற பலரது தலைமையில் விளையாடினாலும் தாம் விளையாடியதிலேயே தோனி தான் சிறந்த கேப்டன் என்று சச்சினும் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement