ஆசியக்கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மாவின் புகைப்படத்தை டிவிட்டர் கவர் இமேஜாக வைத்த பாகிஸ்தான் – வைரலாகும் போட்டோ

PCB
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில தினங்களே உள்ள வேளையில் இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

Asia Cup Trophy

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்லப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள வேளையில் இந்த தொடரின் முக்கியமான இந்தியா பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி கண்டியில் நடைபெற உள்ளது.

எப்போதுமே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரிலும் இவ்விரு அணிகளளுக்கு இடையேயான போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

PCB-1

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் டிவிட்டர் பக்கத்தின் கவர் இமேஜில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : 2023 உ.கோ : எங்கள பாத்து எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க, இந்தியா போன்ற எதிரணிகளுக்கு – நட்சத்திர பாக் வீரர் எச்சரிக்கை

அதோடு அந்த கவர் இமேஜில் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட இருக்கும் ஆறு அணிகளில் கேப்டன் புகைப்படமும் கிராபிக் செய்யப்பட்டது போன்று இடம் பெற்றுள்ளது. இப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைத்துள்ள இந்த கவர் இமேஜ் குறித்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement