2023 உ.கோ : எங்கள பாத்து எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க, இந்தியா போன்ற எதிரணிகளுக்கு – நட்சத்திர பாக் வீரர் எச்சரிக்கை

Imam Ul Haq fakhar Zaman
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்க போகும் 2023 ஐசிசி உலகக் கோப்பை கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்று நிறைய கணிப்புகளும் எதிர்பார்ப்புகளும் காணப்படுகின்றன. இருப்பினும் அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, கருப்பு குதிரையான நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த எதிரணிகளுக்கு மத்தியில் தங்களை புறக்கணிக்கும் இந்தியாவுக்கு இந்த உலகக் கோப்பையை அவர்களுடைய சொந்த மண்ணில் வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. அது போக 1992 முதல் இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைகளில் சந்தித்த 7 போட்டிகளிலும் பதிவு செய்த அனைத்து வரலாற்று அவமான தோல்விகளுக்கும் இம்முறை இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விருப்பமாக இருக்கிறது.

எல்லாரும் பயப்படுறாங்க:
இந்நிலையில் நிறைய போட்டிகளில் விளையாடிய அனுபவத்தையும் தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு நிகராக நம்பர் ஒன் இடத்திலும் இருக்கும் தங்களுடைய அணியை பார்த்து இந்தியா போன்ற எதிரணிகள் பயப்படுவதாக நட்சத்திர பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்உல்-ஹக் அதிரடியாக பேசியுள்ளார். அத்துடன் ஷாஹின் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற தரமான பவுலர்களும் இருப்பதால் 2023 உலக கோப்பையை வெல்வோம் என்று எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

IND vs PAK World Cup

“நான் நிகழ்காலத்தில் வாழ விரும்புவதால் உலகக் கோப்பை பற்றி பேச விரும்பவில்லை. இருப்பினும் எங்களுடைய மனதில் இருக்கும் அந்த தொடருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். எங்களுடைய ஒருநாள் அணியை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். என்பதை நான் அறிவேன். ஏனெனில் நாங்கள் சில மகத்தான வெற்றிகளை பதிவு செய்துள்ளோம். அதை தற்போது நாங்கள் பின்பற்ற வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் எங்களுடைய அணி சிறப்பாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நல்ல பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியன எங்களுடைய பலம் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக நான் 60, பக்கார் 70, பாபர் அசாம் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவத்தை கொண்டுள்ளோம். அதே போல ஷாஹின், ஹரிஷ், நசீம், வாசிம் ஆகியோர் பவுலிங் துறையில் இருக்கின்றனர். மேலும் சடாப், நவாஸ், ஒசாமா ஆகியோர் சுழல் பந்து வீச்சு இருக்கின்றனர். அதே போல இப்திகார் அகமது, சல்மான் ஆஹா, ரிஸ்வான் ஆகியோரும் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பதால் மட்டும் நாங்கள் வலுவான அணி என்று சொல்லவில்லை”

Imam Ul Haq

இதையும் படிங்க:வீடியோ : கோபமான பாபர் அசாம் – நேர்மையாக விளையாடாத ஆப்கானிஸ்தானுக்கு கைகொடுக்காமல் புறக்கணித்த நட்சத்திர வீரர்

“மாறாக என்னை போன்ற சில வீரர்கள் விளையாடாமல் போனாலும் பாகிஸ்தான் சமநிலைக் கொண்டது அணியாக இருக்கிறது. எனவே இதை விட ஒரு சிறந்த அணி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். அதில் தன்னம்பிக்கையுடன் உள்ள வீரர்களுக்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்பதும் தெரியும். அதனாலயே டி20 அணியை விட எங்களுடைய ஒருநாள் அணி வலுவாக இருக்கிறது என்று சொல்கிறேன்” என கூறினார்.

Advertisement