- Advertisement -
ஐ.பி.எல்

விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு அடுத்து தனித்துவமான சாதனை நிகழ்த்திய – சுப்மன் கில்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது போட்டியில் விளையாடிய சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது எட்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்து சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 53 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 35 ரன்களையும் குவித்தனர். குஜராத் அணி சார்பாக தமிழக வீரர் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி வெற்றியை நோக்கி பொறுமையாக முன்னேறிய வேளையில் மழை காரணமாக அவ்வப்போது போட்டி பாதிக்கப்பட்டது. இறுதியில் 19 ஓவர்களுக்கு 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இவ்வேளையில் சரியாக 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 46 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 43 ரன்கள் குவித்தார். அவர் அடித்த இந்த 43 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அடித்த அந்த 43 ரன்கள் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதுகுறித்த தகவல் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் நிகழ்த்திய சாதனை யாதெனில் : 26 வயது வயதிற்குள் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக 500 ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரராக சுப்மன் கில் சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி கடந்து 2013 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக 26 வயதுக்குள் 634 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித் இல்லை.. தோனி தலைமையில் தங்களது ஆல் டைம் கனவு ஐபிஎல் அணியை வெளியிட்ட கில்கிறிஸ்ட், பொல்லாக்

அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 2020 ஆம் ஆண்டு 26 வயதிற்குள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக 519 ரன்களை குவித்திருந்தார். அவர்கள் இருவருக்கு அடுத்து தற்போது 2025 ஆம் ஆண்டு தனது 26-வது வயதுக்குள் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான சுப்மன் கில் இந்த தொடரில் 508 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -