
இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் கம்பேக் கொடுத்திருந்தார். அந்த வகையில் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த வாய்ப்புக்காக காத்திருந்ததால் அதனை கச்சிதமாக பிடித்துக் கொள்வார் என்றும் பேசப்பட்டது.
ஆனால் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 22 ரன்கள் சராசரியுடன் வெறும் 131 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவரது இந்த மோசமான செயல்பாடு பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற பேச்சுக்களும் வலுத்து வருகின்றன. அதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் நான்காவது போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் கருண் நாயர் குறித்து பேசியிருந்த அவர் கூறுகையில் : கருண் நாயரின் மீது நிர்வாகம் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறது.
அவர் நிச்சயம் தனது ஃபார்மிற்கு திரும்புவார் என்கிற நம்பிக்கை என்னிடமும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவருடைய பேட்டிங் நன்றாக இருக்கிறது என்று நானும் கருதுகிறேன். ஏனெனில் முதல் போட்டியின் போது அவர் சரியான இடத்தில் விளையாடவில்லை. அதனால் அவரால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. ஆனால் இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க : 4 ஆவது டெஸ்ட் போட்டியில் புதிய வீரர் அறிமுகம் ஆவதை உறுதிசெய்த கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ
அவரைப் போன்ற ஒரு அனுபவ வீரர் ஒரு முறை 50 ரன்கள் அடித்து விட்டால் நிச்சயம் அந்த பார்மை தொடரக்கூடியவர்கள். எனவே அவருக்கு எல்லாம் சரியாக நடக்கும் என்றும் அவர் நிச்சயமாக பார்முக்கு திரும்புவார் என்கிற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.