
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்தது. பின்னர் இங்கிலாந்து அணி விளையாடுவதற்கு முன்னதாக மழை பெய்ததன் காரணமாக மீண்டும் போட்டி நடைபெறாமல் போனது. அதனால் எந்த அணியும் வெற்றி தோல்வியின்றி போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக துவக்க வீரராக விளையாடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 59 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் நேற்று அடித்த இந்த அரைசதத்தின் மூலம் கே.எல் ராகுலின் சாதனை ஒன்றிணையும் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இங்கிலாந்து மண்ணில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரராக கே.எல் ராகுல் முதலிடத்தில் இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு மேன்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியின் போது கே.எல் ராகுல் 27 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். இதுவே இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதமாக இருந்து வந்தது.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் வீரரின் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை நிகழ்த்திய அபிஷேக் சர்மா – விவரம் இதோ
இவ்வேளையில் நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்து இங்கிலாந்து மண்ணில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.