நம்பர் ஒன் பாபரை முந்த நூலிழையில் ரெடியான கில்.. தரவரிசையில் முன்னேறிய கிங் கோலி, ரோஹித்

ICC Rankings 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் பாதி நிறைவடைந்துள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அதே போல தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் டாப் இடங்களை பிடித்துள்ளன.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி இந்தியாவிற்கு நல்ல துவக்கத்தை கொடுத்து வரும் கேப்டன் ரோஹித் சர்மா டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

பாபரை முந்துவாரா கில்:
அதே போல அழுத்தமான தருணங்களில் அபாரமாக செயல்பட்டு சேஸ் மாஸ்டர் என்பதை நிரூபித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலியும் கூடுதல் புள்ளிகளை பெற்று 6வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவர்களை விட சமீப காலங்களாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் சுப்மன் கில் தொடர்ந்து உலகின் நம்பர் 2 பேட்ஸ்மேனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.

சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாக உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் முதலிடத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாமை இந்த உலகக் கோப்பையில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் காரணமாக ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாடாத அவர் மீண்டும் வாய்ப்பு பெற்று தற்போது நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதால் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ளார்.

- Advertisement -

அதனால் தற்சமயத்தில் 823 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் அவர் 829 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பாபர் அசாமை முந்துவதற்கு வெறும் 6 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்த சூழ்நிலையில் பாபர் அசாம் இந்த உலக கோப்பையில் சுமாராக செயல்பட்டு வருவதால் அடுத்த சில போட்டிகளிலேயே அவரை முந்தி கில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சாதனை படைக்க பிரகாச வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: 2 குழந்தைங்க பிறந்துட்டாங்கன்னு.. விராட் கோலியை ஸ்லெட்ஜிங் பண்ணி சொதப்பிட்டேன்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

மேலும் டாப் 10 பவுலர்கள் பட்டியலில் இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 8வது இடத்திலும் முகமது சிராஜ் 2வது இடத்திலும் இருக்கின்றனர். அத்துடன் டாப் 10 ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா மட்டும் தொடர்ந்து 9வது இடத்தில் நீடித்து வருகிறார். அது போக அணிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியாக இந்தியா முதலிடத்தில் ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement