2 குழந்தைங்க பிறந்துட்டாங்கன்னு.. விராட் கோலியை ஸ்லெட்ஜிங் பண்ணி சொதப்பிட்டேன்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

Alex Lees
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய மிகச் சிறந்த திறமைகளால் கடந்த 15 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 26,000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த வருகிறார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்த அவர் தற்போது 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

பொதுவாக விராட் கோலி என்றாலே களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றிக்கு போராடக் கூடியவராக அறியப்படுகிறார். குறிப்பாக எதிரணிகள் ஸ்லெட்ஜிங் செய்தால் அதற்கு கொஞ்சமும் வளைந்து கொடுக்காமல் இரு மடங்கு பதிலடி கொடுக்கக் கூடிய அவர் பலமுறை மிட்சேல் ஜான்சன் போன்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களுக்கு கொடுத்த பதிலடிகளை மறக்க முடியாது.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் செய்து சொதப்பல்:
இந்நிலையில் கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் 2019க்குப்பின் நீங்கள் சதமடிக்காமல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நான் 2 குழந்தைகளையே பெற்று விட்டேன் என்று விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்ததாக இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் லீஸ் ரசிகர்கள் அறியாத பின்னணியை பகிர்ந்துள்ளார். இருப்பினும் அதற்கேற்றார் போல் செயல்பட்டு சதமடிக்க விரும்பியதாக தெரிவிக்கும் அவர் இறுதியில் 56 ரன்களில் அவுட்டாகி சொதப்பியதாகவும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி டெலிகிராப் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியில் நான் சர்வதேச அளவில் அனுபவமற்றவராக இருந்ததால் அவர் தம்முடைய வெய்ட்டை பயன்படுத்த முயற்சித்தார். அதனால் எங்களிடம் ஒரு சுமாரான உரையாடல் நடந்தது. அதாவது அவர் வழக்கம் போல ஆக்ரோஷமாக செயல்படுவதை அப்போட்டியிலும் வெளிப்படுத்தினார். இருப்பினும் நான் அவரைப் போன்ற யாருடைய இடத்தையும் பற்றி கவலைப்படவில்லை”

- Advertisement -

“ஏனெனில் களத்தில் நாம் அனைவருமே சமமானவர்கள். அதனால் யாரோ என்னை மிரட்ட முயற்சிப்பதை நான் பொறுத்துக் கொள்ள போவதில்லை. அவர் ஒரு நம்ப முடியாத வீரர். ஆனால் அவர் ஒரு முட்டாள் என்றும் நான் நினைத்தேன். அதனால் நீங்கள் கடைசியாக சதம் அடித்ததிலிருந்து எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்று சொன்னேன். மனிதரான அவருடைய மனதில் இது கண்டிப்பாக விளையாடும் என்பது எனக்கு தெரியும்”

இதையும் படிங்க: ஆல் ஏரியாலயும் அசத்துறீங்களே.. இனிமேலும் இந்தியா ஏமாந்து போறதுக்கு வழியே இல்ல.. சோயப் அக்தர் கருத்து

“அதனால் நல்ல போட்டியாளரான அவர் வெற்றி பெற விரும்பினார். இருப்பினும் என்னுடைய தோளில் பில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள் என்பதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் நீங்கள் தோல்வியை சந்திக்காமல் போட்டியை கொடுக்கலாம். ஆனாலும் இறுதியில் 56 ரன்கள் கடந்ததும் அவுட்டானது மிகப்பெரிய அவமானமானது. குறிப்பாக அவரைப் போன்றவருக்கு சதமடித்து போட்டியை வெல்வது பதிலடியாக இருந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement