ஆல் ஏரியாலயும் அசத்துறீங்களே.. இனிமேலும் இந்தியா ஏமாந்து போறதுக்கு வழியே இல்ல.. சோயப் அக்தர் கருத்து

Shoaib Akhtar 9
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா கடந்த 20 வருடங்களாக ஐசிசி தொடரில் மிகப்பெரிய சவாலை கொடுத்து வந்த நியூசிலாந்தையும் தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

தரம்சாலாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 273 ரன்கள் துரத்திய இந்தியாவிற்கு ரோஹித் சர்மா 46, கில் 26 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் அப்படியே பயன்படுத்திய விராட் கோலி சதத்தை தவற விட்டாலும் 95 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் அப்போட்டியில் நியூசிலாந்தை 300 ரன்கள் தொடவிடாமல் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

வாழ்த்திய அக்தர்:
இந்நிலையில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தொடர்ந்து இந்தியா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். எனவே இந்த உலகக் கோப்பையை சொந்த மண்ணில் இந்தியா வெல்லாமல் ஏமாற்றத்துடன் வெளியே போவதற்கு எந்த வழியும் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

“விராட் கோலி எப்போதுமே அழுத்தத்தில் சிறப்பாக செயல்படக் கூடியவர். அழுத்தம் அவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுக்கிறது. அதை பயன்படுத்தி பெரிய ரன்களையும் சதங்களையும் அடித்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் அவரை இன்ஸ்டாகிராமில் பலரும் பின்பற்றுகிறார்கள். அதற்கு அவர் தகுதியானவர். நியூசிலாந்து அணிக்கு சுப்மன் கில்லே போதுமானவர்”

- Advertisement -

“அதே போல ரோகித் சர்மாவும் சாதாரணமாக அவுட்டாகாமல் போயிருந்தால் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார். ஒருவேளை கேஎல் ராகுல் 3 அல்லது 4வது இடத்தில் வந்திருந்தால் அவரும் நியூசிலாந்தை தோற்கடிக்க போதுமானவராக செயல்பட்டிருப்பார். ஏனெனில் இந்தியாவின் பேட்டிங் ஆழம் அந்த அளவுக்கு நீளமாக இருக்கிறது. மேலும் நியூசிலாந்து 300 – 350 ரன்கள் அடிக்காமல் போனதில் ஷமி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்”

இதையும் படிங்க: மும்பையில் எப்டி வாழ்றீங்க.. காற்றை திங்குற மாதிரி இருக்கு.. இந்தியா பற்றி ஜோ ரூட் புதிய விமர்சனம்

“கொஞ்சம் ரன்களை வாரி வழங்கினாலும் 5 விக்கெட்களை எடுத்து அவர் அதை சரி செய்து விட்டார். அந்த வகையில் தம்முடைய திறமையை காட்டிய அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இந்தியா இதே பவுலிங் அட்டாக்கை பயன்படுத்த வேண்டும். மொத்தத்தில் அவர்களிடம் முழுவதுமான பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை இருக்கிறது. அதன் காரணமாக உலகக் கோப்பையை இந்தியா வெல்லாமல் போவதற்கு எவ்விதமான வழிகளும் இல்லை” என்று கூறினார்.

Advertisement