மும்பையில் எப்டி வாழ்றீங்க.. காற்றை திங்குற மாதிரி இருக்கு.. இந்தியா பற்றி ஜோ ரூட் புதிய விமர்சனம்

Joe Root 2
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் பாதி நிறைவடைந்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் மிகச்சிறப்பாக செயல்பட்டு முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இருப்பினும் இத்தொடரில் மிரட்டலாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் ஆரம்ப முதலே தடுமாறி வருவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக எதிரணிகளை அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதல் 4 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது.

- Advertisement -

ஜோ ரூட் அதிருப்தி:
அதிலும் குறிப்பாக மும்பையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிடம் சரமாரியாக அடி வாங்கிய அந்த அணி 229 வித்தியாசத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதனால் செமி ஃபைனலுக்கு சென்று கோப்பையை தக்க வைக்க எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால் அனைத்து வீரர்களும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டதாக ஜோ ரூட் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சதமடித்த க்ளாஸென் மூச்சு வாங்கி பலமுறை மைதானத்தில் அமர்ந்ததாக தெரிவிக்கும் அவர் அடில் ரசித் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் மும்பையில் காற்றை ஸ்வாசிப்பதற்கு பதில் சாப்பிடுவது போல் உணர்ந்ததாக வித்தியாசமாக பேசியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இதற்கு முன் நான் வெளிப்படையாக வெப்பமான சூழ்நிலையிலும் அதிக ஈரப்பதமான சூழ்நிலையிலும் விளையாடியுள்ளேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையில் எப்போதும் விளையாடியதில்லை. ஏனெனில் அங்கே உங்களால் மூச்சு விட முடியாதது போல் இருந்தது. நீங்கள் காற்றை ஒன்பது போல் இருந்தது. அந்த சூழ்நிலையை மிகவும் தனித்துவமாக இருந்தது. அடில் ரசித் பந்து வீசி திரும்பி நடந்து கொண்டிருந்த போது காற்றுக்காக மூச்சு திணறினார்”

இதையும் படிங்க: இப்பவாச்சும் விராட் கோலி மாதிரி அந்த முடிவை எடுங்க.. பாபருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

“மேலும் க்ளாஸென் எவ்வளவு தடுமாறினார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். சொல்லப்போனால் பேட்டிங் செய்த பின் அதன் காரணமாக அவரால் ஃபீல்டிங் செய்ய வரமுடியவில்லை” என்று மும்பையில் எப்படியா வாழ்றீங்க என்பது போல கூறினார். முன்னதாக தரம்சாலா மைதானத்தில் வெளிப்புற களங்கள் வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவது போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது மும்பையில் காற்று நன்றாக இல்லை என வெளிநாட்டு அணிகள் மற்றுமொரு விமர்சனத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement