இப்பவாச்சும் விராட் கோலி மாதிரி அந்த முடிவை எடுங்க.. பாபருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களின் முதல் 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளுடன் நல்ல துவக்கத்தை பெற்றது.

ஆனால் அதன் பின் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 191 ரன்களுக்கு சுருண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 163 ரன்கள் விளாசிய வார்னரின் கேட்ச்சை 10 ரன்களில் தவற விட்டு தோல்வியை சந்தித்தது. அதை விட சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பவுலிங், ஃபீல்டிங் துறையில் மொத்தமாக சொதப்பிய பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பதவி விலகுங்க:
இந்த தோல்விகளுக்கு கேப்டனாக முன்னின்று டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாட வேண்டிய கேப்டன் பாபர் அசாம் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்துவதும் கேப்டன்ஷிப்பில் சுமாரான முடிவுகளை எடுப்பதுமே முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அதனால் அவர் பதவி விலக வேண்டுமென்று சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் போர்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் கேப்டன்ஷிப் செய்வதற்கு சரியானவர் கிடையாது என்று ஒரு வருடத்திற்கு முன்பே சொல்லிய போது தம்மை துரோகி என்று அனைவரும் விமர்சித்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷிட் அலி தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் கேப்டன்ஷிப் அழுத்ததால் பேட்டிங்கில் தடுமாறும் பாபர் அசாம் அந்த பதவியை விராட் கோலி போல ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே என்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்தேன். ஆனால் அவர் விராட் கோலி போல தன்னுடைய கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தற்போது விராட் கோலி பதவி விலகிய பின் எந்தளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார் என்பதை பாருங்கள். எனவே அந்த பதிவிலிருந்து விலகினால் நிச்சயம் அவருடைய செயல்பாடுகள் இன்னும் சிறப்பாக மாறும்”

இதையும் படிங்க: தோல்வியை சந்தித்தாலும் வங்கதேச வீரர் முகமதுல்லா உலககோப்பை போட்டிகளில் படைத்துள்ள – வரலாற்று சாதனை

“இதை மீண்டும் சொல்வதால் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சிலர் எனக்கு பாபர் அசாம் பிடிக்காது என்றும் நான் துரோகி என்றும் மாற்றி பேசுவார்கள்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான் அடுத்ததாக வலுவான தென்னாப்பிரிக்காவை அக்டோபர் 27ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement