தோல்வியை சந்தித்தாலும் வங்கதேச வீரர் முகமதுல்லா உலககோப்பை போட்டிகளில் படைத்துள்ள – வரலாற்று சாதனை

Mahmudullah
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது 149 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்ததோடு இந்த தொடருக்கான புள்ளி பட்டியலிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியானது குவிண்டன் டி காக் (174 ரன்கள்) மற்றும் கிளாஸன் (90 ரன்கள்) ஆகியோரது மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் இறுதிவரை போராடி 46.4 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் நிச்சயம் அந்த அணி 100 – 150 ரன்களில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் களத்தில் இருந்த வங்கதேச அணியின் அனுபவ வீரரான முகமதுல்லா :

- Advertisement -

இறுதிவரை அந்த அணிக்காக போராடி 111 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 111 ரன்கள் குவித்து ஒன்பதாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அவரது இந்த மிகச்சிறப்பான இன்னிங்ஸ் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றதோடு தற்போது பல சாதனைகளையும் அவர் இந்த சதத்தோடு பதிவு செய்துள்ளார். அந்த வகையில் உலகக்கோப்பை போட்டிகளில் வங்கதேச அணி சார்பாக அதிக சதங்களை விளாசிய வீரராக முகமதுல்லா தற்போது மூன்றாவது சதத்தை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி 50வது சதத்தை அங்க தான் அடிப்பாரு.. தேதியுடன் தில்லான கணிப்பை வெளியிட்ட கவாஸ்கர்

மேலும் நம்பர் நான்கு மற்றும் அதற்கு கீழ் இறங்கி உலக கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் ஏ.பி.டிவில்லியர்ஸுடன் இணைந்து (3 சதங்களுடன்) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதோடு உலககோப்பை போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை (4 சிக்ஸர்) அடித்த வீரர் என்ற சாதனையும் முகமதுல்லா லிட்டன் தாசுடன் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement