அட்டகாசமாக விளையாடிய கில்.. சாதனையை தவற விட்டு திடீரென பெவிலியன் செல்ல காரணம் என்ன?

Shubman Gill
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் செமி ஃபைனல் நவம்பர் 15ஆம் தேதி மதியம் 2 மணிக்கு மும்பையில் நடைபெற்றது. அதில் லீக் சுற்றில் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா மற்றும் 4வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஒருபுறம் கில் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் நியூசிலாந்து பவுலர்களை பந்தாடிய கேப்டன் ரோஹித் சர்மா 4 பவுண்டரி 4 சிக்சருடன் 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்து 47 (29) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

வெளியேறிய கில்:
அந்த நிலைமையில் வந்த விராட் கோலி தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் ரோஹித் சர்மா வெளியேறிய பின் அதிரடியாக விளையாடிய கில் அரை சதம் கடந்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79* (65) ரன்களில் அட்டகாசமாக விளையாடியதால் கண்டிப்பாக சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது மும்பையில் நிலவிய அதிகப்படியான வெப்பத்தால் சிறப்பாக செயல்பட முடியாமல் தடுமாறிய அவர் மைதானத்திலேயே அமர்ந்தார். அதைத்தொடர்ந்து தண்ணீர் குடித்த அவருக்கு இந்திய அணியின் மருத்துவ குழுவினர் தேவையான முதலுதவிகளை கொடுத்தனர். இருப்பினும் அதிகப்படியான வெப்பம் நிலவியதால் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட கில் பரிதாபமாக களத்தை விட்டு வெளியேறினார்.

- Advertisement -

குறிப்பாக கொஞ்சம் கூட காயத்தை சந்திக்காத போதிலும் மும்பையின் வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சதமடித்து சாதனை படைக்கும் வாய்ப்பை தவற விட்டு அவர் வெளியேறியது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. ஏனெனில் நன்கு செட்டிலான அவர் தொடர்ந்து விளையாடினால் கண்டிப்பாக இந்தியா எளிதாக 350க்கும் மேற்பட்ட ரன்களை அடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்.

இதையும் படிங்க:  71 ரன்ஸ்.. தெறிக்கும் வான்கடே.. நியூஸிலாந்தை நொறுக்கிய ஹிட்மேன்.. கெயிலை முந்தி 3 புதிய உலக சாதனை

முன்னதாக இதே மைதானத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாசின் வெப்பத்தையும் தாண்டி சதமடித்த நிலையில் கில் அதை செய்ய முடியாமல் வெளியேறினார். அத்துடன் மேற்கொண்டு தேவைப்பட்டால் மட்டுமே அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வருவார். இதை தொடர்ந்து அவருக்கும் சேர்த்து மறுபுறம் அசத்தி வரும் விராட் கோலி அரை சதம் கடந்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி இந்தியா 350 ரன்கள் தாண்டுவதற்காக பேட்டிங் செய்து வருகிறார். அதனால் சற்று முன் வரை இந்தியா 29 ஓவர்களில் 203/1 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறது.

Advertisement