IND vs SL : நான் இஷான் கிஷானுக்கு குறைஞ்சவன் இல்ல, பதிலடியுடன் சுப்மன் கில் படைத்த சூப்பரான சாதனை இதோ

Shuman Gill Ishan Kishan
- Advertisement -

வரும் 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த சுப்மன் கில் 11 பவுண்டரியுடன் 70 (60) ரன்கள் விளாசி அவுட்டானார்.

Virat Kohli 113

- Advertisement -

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 9 பவுண்டரி 2 சிக்சருடன் 83 (67) ரன்கள் விளாசி ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 28 (24) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று விராட் கோலி 4வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது எதிர்புறமிருந்த ராகுல் 39 (29) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த பாண்டியா 14 ரன்னில் நடைய கட்டினாலும் மறுபுறம் அசத்தலாக செயல்பட்ட விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதமடித்து 113 (87) ரன்கள் குவித்ததால் இந்தியா 50 ஓவர்களில் 373/7 ரன்கள் விளாசியது.

நிரூபித்த கில்:
இந்த பெரிய ரன்களை குவிப்பதற்கு ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோரது ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் முக்கிய காரணமாக அமைந்தது. முன்னதாக இத்தொடரில் அவர் தான் தம்முடன் தொடக்க வீரராக விளையாடுவார் என்று ரோகித் சர்மா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்த போது ஏராளமான சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. ஏனெனில் கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி 210 ரன்களை அடித்து நொறுக்கிய இசான் கிசான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற 2 உலக சாதனைகளை படைத்தார்.

அதற்கு முன்பாகவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் உட்பட இந்தியாவுக்காக பெற்ற வாய்ப்புகளில் அவர் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தார். மறுபுறம் அவருக்கு முன்பாகவே 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சுப்மன் கில் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

குறிப்பாக முதலில் அசத்தியவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா தெளிவுபடுத்தினார். இருப்பினும் உலகிலேயே முந்தைய போட்டியில் இரட்டை சதமடித்தும் இவருக்காக அடுத்த போட்டியில் இசான் கிசான் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கொடுமை இந்தியாவில் தான் நடைபெறும் என்று விமர்சனங்கள் இருந்தன. அதிலும் குறிப்பாக என்ன தான் பெரிய ரன்களை தொடர்ச்சியாக எடுத்தாலும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ள சுப்மன் கில்லுக்கு பதில் பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் இஷான் கிசான் தான் சரியானவர் என்றும் எதிர்ப்புகள் காணப்பட்டன.

Shubman Gill

அத்துடன் ரோஹித் – இஷான் கிசான் என்ற வலது – இடது கை ஜோடியே எதிரணிக்கு சவாலை கொடுப்பதில் சிறப்பாக இருக்கும் என்றும் விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் மீண்டும் அசத்தியுள்ள சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 16 இன்னிங்ஸில் 757* ரன்களை 58.23 என்ற சராசரியிலும் 100.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்து அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 16 இன்னிங்ஸ்களுக்கு பின் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சூப்பரான வரலாற்று சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 757*
2. ஸ்ரேயாஸ் ஐயர் : 748
3. நவ்ஜோட் சித்து : 725
4. விராட் கோலி : 655

இதையும் படிங்கவீடியோ : தனது அரை சதத்தை வானத்தை நோக்கி டெடிகேட் செய்த ரோஹித் சர்மா – யாருக்குன்னு தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க

இதிலிருந்து அதிரடியாக விளையாடும் இசான் கிசானுக்கு தொடர்ச்சியாக சீராக பெரிய ரன்களை குவிக்கும் நான் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதையும் அவர் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த பாகுபாடு இல்லாமல் அவரை இஷான் கிசான் பாராட்டியது ரசிகர்களின் மனதை வென்றது.

Advertisement