தனது அரை சதத்தை வானத்தை நோக்கி டெடிகேட் செய்த ரோஹித் சர்மா – யாருக்குன்னு தெரிஞ்சா நெகிழ்ந்து போவீங்க

Rohit Sharma Ddedication
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு விரைவாக ரன்களை சேர்த்த ரோகித் சர்மா முதல் ஆளாக அரை சதம் கடந்த அசத்தினார்.

கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக காயத்துடன் வெற்றிக்கு போராடிய அவர் இப்போட்டியில் முழுமையாக குணமடைந்து இலங்கை பவுலர்களை அதிரடியாக வெளுத்து வாங்கினார். அவருடன் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் தனது பங்கிற்கு அசத்தலாக பேட்டிங் செய்து 134 ரன்கள் ஓப்பனிங் அமைத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்த போது 11 பவுண்டரியுடன் 70 (60) ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 9 பவுண்டரி 3 சிக்சருடன் 83 (67) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

ரோஹித்தின் டெடிக்கேசன்:
அப்போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயன்று 28 (24) ரன்களில் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த ராகுலுடன் கைகோர்த்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். 4வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்திய இந்த ஜோடியில் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய ராகுல் மீண்டும் 39 (29) ரன்களில் அதிரடியாக விளையாட முயன்று அவுட்டானார்.

அப்போது அந்த ஹர்திக் பாண்டியா 14 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் சில கேட்ச்களை தவற விட்ட இலங்கைக்கு தண்டனை கொடுக்கும் வகையில் அபாரமாக பேட்டிங் செய்த விராட் கோலி 12 பவுண்டரி 1 சிக்சருடன் 113 (87) ரன்கள் விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45ஆவது சதத்தை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் 73வது சதத்தை பதிவு செய்து அவுட்டானார். அவரது அதிரடியால் 50 ஓவர்களில் இந்தியா எடுத்த 373/7 ரன்களை இலங்கை துரத்தி வருகிறது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா அரை சதத்தை அடித்தவுடன் அதை கொண்டாடும் போது வானத்தை நோக்கி “இது உங்களுக்குத்தான்” எந்த வகையில் பேசியது கவனத்தை ஈர்த்தது. கடந்த 2 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் சுமாரான பார்மில் திண்டாடி வரும் நிலையில் அடித்த இந்த அரை சதத்துக்காக அவர் கடவுளுக்குதான் நன்றி தெரிவிக்கிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னை விட்டுப் பிரிந்த தன்னுடைய செல்ல வளர்ப்பு நாய்க்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே அவர் தன்னுடைய அரை சதத்தை வானத்தை நோக்கி அர்ப்பணிப்பு செய்துள்ளார். ஆம் செல்லப்பிராணிகளை மிகவும் விரும்பக்கூடிய ரோகித் சர்மா ஒரு குட்டி நாயை இளம் வயதிலிருந்தே தனது பிள்ளையை போல் பாவித்து வளர்த்து வந்துள்ளார். அது அவருடனும் அவருடைய குடும்பம் மற்றும் குழந்தையுடனும் மிகவும் நெருங்கி பழகி ஒன்றாக இருந்து பாசத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக வீட்டின் அனைத்து இடங்களிலும் இடம் பெற்று ரோகித் சர்மா வாழ்வின் ஒரு அங்கமாக இருந்த அந்த செல்லப்பிராணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயற்கை எய்தியது. அது பற்றி நீங்காத துயருடன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தது பின்வருமாறு.

இதையும் படிங்கIND vs SL : அதிர்ஷ்டத்துடன் சதமடித்து சச்சினை மிஞ்சிய கிங் கோலி – 2 புதிய உலக சாதனை, இலங்கைக்கு பெரிய இலக்கு நிர்ணயம்

“நேற்று எங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள். நம் வாழ்வின் காதலுக்கு விடைகொடுத்தோம். நீங்கள் எவருக்கும் இருக்கக்கூடிய சிறந்த ஃபர்பேபியாக இருந்தீர்கள். என் முதல் காதல், என் முதல் குழந்தை, இதுவரை வாழ்ந்த மிக மென்மையான ஃபர்பால். நாம் மீண்டும் சந்திக்கும் வரை. எங்கள் வாழ்க்கையில் எப்போதும் கொஞ்சம் குறைவான மேஜிக் இருக்கும்” என்று கூறியுள்ளார். தற்போது அதன் நினைவாகவே ரோகித் சர்மா தன்னுடைய அரை சதத்தை அர்ப்பணிப்பு செய்ததை அறியும் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைகிறார்கள்.

Advertisement