IND vs SL : அதிர்ஷ்டத்துடன் சதமடித்து சச்சினை மிஞ்சிய கிங் கோலி – 2 புதிய உலக சாதனை, இலங்கைக்கு பெரிய இலக்கு நிர்ணயம்

Virat Kohli 113
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. அதனாலேயே நடைபெற்ற டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இத்தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் விளையாடுகிறார்கள். அந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌஹாத்தி நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு பவர் பிளே ஓவர்களில் இலங்கை பவுல்களை வெளுத்து வாங்கிய ஓப்பனிங் ஜோடியில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த ரோகித் சர்மா தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக செயல்பட்டு முதல் ஆளாக அரை சதமடித்தார். அவருடன் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்க விட்டு அரை சதம் கடந்து இந்தியாவை வலுப்படுத்தினார்.

- Advertisement -

அசத்திய கிங் கோலி:
தொடர்ந்து 20 ஓவர்கள் வரை நிலையாக நின்று 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 11 பவுண்டரியுடன் 70 (60) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 83 (67) ரன்கள் குவித்து ரோஹித் சர்மா அவுட்டான போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முயன்று 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 (24) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்து வந்த ராகுலுடன் கைகோர்த்த விராட் கோலி தமக்கே உரித்தான பாணியில் நங்கூரமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்து அரை சதம் கடந்து 4வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை 300 ரன்கள் கடக்க உதவினார். அப்போது மறுபுறம் விமர்சனத்தில் தவிக்கும் கேஎல் அதிரடியாக விளையாடும் முயன்றாலும் மீண்டும் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 39 (29) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

- Advertisement -

அந்த சமயத்தில் வந்த ஹர்திக் பாண்டியா 14 (12) ரன்களில் அவுட்டாலும் மறுபுறம் நின்ற விராட் கோலிக்கு அதிர்ஷ்டமும் கூடவே இருந்தது என்ற சொல்லலாம். ஏனெனில் 51 ரன்னில் இருந்த போது அவர் கொடுத்த கேட்ச்சை குசால் மெண்டிஸ் கோட்டை விட்ட நிலையில் 82 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை கேப்டன் சனாக்கா நழுவ விட்டார். அதை பயன்படுத்திய விராட் கோலி தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தையும் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 73வது சதத்தையும் விளாசினார்.

கடைசியாக இந்தியா விளையாடிய வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் சதமடித்திருந்த அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து விளையாடிய அவர் 12 பவுண்டரி 1 சிக்சருடன் 113 (87) ரன்களும் அக்சர் படேல் 9, ஷமி 4*, சிராஜ் 7* எடுத்த ரன்களையும் சேர்த்து 50 ஓவர்களில் இந்தியா 373/7 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

1. இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து இலங்கைக்கு எதிராக 9 ஒருநாள் சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை தகர்த்து அவர் புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் சச்சின் 8 சதங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். 3வது இடத்தில் 7 சதங்களுடன் சயீத் அன்வர் உள்ளார்.

2. அத்துடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் 9 சதங்களை அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 9 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 9 சதங்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

3. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையும் விராட் கோலி சமன் செய்துள்ளார். இருவருமே இந்திய மண்ணில் தலா 20 சதங்கள் அடித்துள்ளனர்.

இதையும் படிங்கஇலங்கை மட்டுமல்ல நியூசி, ஆஸி தொடரிலும் வெளியேறும் பும்ரா – எப்போ தான் வருவார்? வெளியான அறிவிப்பு இதோ

4. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 45 சதங்களையும் (257 இன்னிங்ஸ்) சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 73 சதங்களையும் (541 இன்னிங்ஸ்) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (424 மற்றும் 549 இன்னிங்ஸ்) சாதனையும் அவர் தகர்த்துள்ளார்.

Advertisement