இலங்கை மட்டுமல்ல நியூசி, ஆஸி தொடரிலும் வெளியேறும் பும்ரா – எப்போ தான் வருவார்? வெளியான அறிவிப்பு இதோ

Bumrah
- Advertisement -

2023 காலண்டர் வருடத்தில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை ஆகிய தொடர்களை வெல்லும் லட்சியத்துடன் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. சொல்லப்போனால் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2013க்குப்பின் எவ்விதமான ஐசிசி உலக கோப்பைகளை வெல்ல முடியாமல் விமர்சனங்கள் சந்தித்துள்ள இந்தியா இந்த 2 தொடர்களில் ஏதேனும் ஒன்றை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் நாக் அவுட்டில் சொதப்பி வெளியேறியது.

IND Japrit Bumrah

- Advertisement -

அதற்கு ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தை விட ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காகவே பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக முக்கியமற்ற தொடர்களில் ஓய்வெடுத்து வந்தார்.

எப்போ தான் வருவார்:
ஆனால் அதையும் தாண்டி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த அவர் 2022 ஆசிய கோப்பையில் பங்கேற்காதது தோல்வியை கொடுத்தது. அதிலிருந்து குணமடைந்து அக்டோபர் மாதம் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் ஓரிரு போட்டிகளில் களமிறங்கிய அவர் மீண்டும் காயமடைந்து வெளியேறியது டி20 உலகக் கோப்பையில் தோல்வியை கொடுத்தது. அந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டிருந்த அவர் முழுமையாக குணமடைந்து விட்டார் என்பதால் இன்று துவங்கிய இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது.

Bumrah

ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதாலும் முழுமையாக பந்து வீசுவதற்கு இன்னும் நேரம் தேவைப்படுவதாலும் இலங்கை ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகுவதாக நேற்று அப்படியே யு-டர்ன் போட்டு பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரிலுருந்து ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அத்துடன் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கும் செய்திகள் அதன் பின்பும் கூட முழுமையாக குணமடைந்தால் மட்டுமே கடைசி 2 போட்டியிலும் விளையாடுவார் என்று தெரிவிக்கிறது. இது பற்றி என்சிஏ’வில் இருக்கும் அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு.

bumrah 1

“என்சிஏவில் கடந்த வாரம் தேவையான சோதனைகளை முடித்த பும்ரா தற்போது மும்பையில் என்சிஏ ஸ்போர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் தலைவர் நிதின் படேல் பார்வையில் புதிய சோதனைகளை எடுத்து வருகிறார். எனவே அந்த சோதனைகளுக்குப் பின் ஸ்கேன் முடிவுகளையும் வைத்து பும்ரா முழுமையாக குணமடைய எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் பகுதியில் அவர் விளையாடுவது சந்தேகமாகும்” என்று கூறினார்.

- Advertisement -

மொத்தத்தில் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பும்ரா முழுமையாக விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுடன் இந்தியாவின் அட்டவணை முடிந்து 2023 ஐபிஎல் தொடர் மார்ச் மாத இறுதியில் ஆரம்பமாக உள்ளது. அதனால் சந்தேகமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் பும்ரா விளையாடுவார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் மீண்டும் அத்தொடரின் முடிவில் காயமடைந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

Jasprith Bumrah vs KKR

இதையும் படிங்க: வீடியோ : பார்முக்கு திரும்பும் ஹிட்மேன் ரோஹித் சர்மா – சுயநலமின்றி அவுட்டானாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

ஏனெனில் ஏற்கனவே 2019 முதல் இதுவரை இந்தியா விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் 30 சதவீதம் மட்டுமே விளையாடி அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 95% போட்டிகளில் விளையாடினார். அதனால் பேசாமல் நீங்கள் ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இந்தியாவுக்காக விளையாட வர வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

Advertisement