குரங்கு கடிச்சிருச்சு.. அதான் இப்படி.. நேரலை பேட்டியில் ரிங்கு சிங்கை கலாய்த்த சுப்மன் கில்

Rinku Singh Gill 2
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராவதற்கு உதவும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் சமீபத்திய ஆஸ்திரேலிய டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் அணி இத்தொடரிலும் இந்தியாவின் வெற்றிக்காக களமிறங்க உள்ளது. இத்தொடரில் ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய் போன்ற இளம் வீரர்களுக்கு மத்தியில் ரிங்கு சிங் ஆட்டத்தை பார்ப்பதற்காக நிறைய இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

குரங்கு கடிச்சுருச்சு:
ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து நம்ப முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் இதுவரை அயர்லாந்து, 2023 ஆசிய போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டிய சூழ்நிலையில் அசத்தலாக செயல்பட்ட அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.

எனவே தற்போது பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென்னாப்பிரிக்க மண்ணில் அவரால் சாதிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் விளையாடுவது பற்றி சமீபத்திய பிசிசிஐ பேட்டியில் ரிங்கு சிங் பேசியது பின்வருமாறு. “என்னுடைய ஃபிட்னெஸில் நான் எப்போதுமே கவனம் செலுத்தி வருகிறேன்”

- Advertisement -

“குறிப்பாக நான் வேகமாக ஓட வேண்டும் என்பதை மனதில் வைத்து பயிற்சிகளை எடுத்து வருகிறேன். ஏனெனில் ஒரு பெரிய போட்டியில் நான் சிறப்பாக விளையாடுவதற்கு என்னுடைய ஃபிட்னஸ் மிகவும் உச்சத்தில் இருக்க வேண்டும்” என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உள்ளே வந்த சுப்மன் கில். “இவரை குரங்கு கடித்துள்ளது. அதனாலயே மிகவும் வேகமாக ஓடுவதற்கு முயற்சிக்கிறார்” என்று சம்பந்தமின்று சொல்லி கலாய்த்து விட்டு சென்றார்.

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் முஷி பாய்.. சச்சின் பெயரில் இருந்த மோசமான சாதனையை தனதாக்கிய ரஹீம்

அப்போது புன்னகையை வெளிப்படுத்திய ரிங்கு சிங் மேலும் பேசியது பின்வருமாறு. “2013 முதல் நான் நம்பர் 5வது இடத்தில் விளையாடி வருகிறேன். உள்ளூரில் உத்தர பிரதேச அணிக்காகவும் இதே இடத்தில் விளையாடுவதால் மிடில் ஆர்டரில் அசத்துவது எளிதானதல்ல என்பது எனக்கு தெரியும். குறிப்பாக டாப் 3 – 4 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி விட்டால் நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும். எனவே களத்தில் முடிந்தளவுக்கு நான் அமைதியுடன் விளையாட முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement