ரொம்ப தேங்க்ஸ் முஷி பாய்.. சச்சின் பெயரில் இருந்த மோசமான சாதனையை தனதாக்கிய ரஹீம்

Mushfiqar Rahim 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 1 – 1 என்ற கணக்கில் போராடி சமன் செய்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற வங்கதேசம் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றதால் நியூசிலாந்தை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து தொடரை சமன் செய்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரில் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து நியூசிலாந்து தப்பித்தது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

சச்சினின் மோசமான சாதனை:
அத்துடன் 2008க்குப்பின் 15 வருடங்கள் கழித்து முதல் முறையாக வங்கதேச மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்து நியூசிலாந்து அசத்தியது. மறுபுறம் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரை வென்று சரித்திரம் படைக்கும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அந்த வகையில் இப்போட்டியில் சந்தித்த தோல்வியையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வங்கதேசம் பதிவு 257 தோல்விகளில் அந்நாட்டின் நட்சத்திர வீரர் முஸ்பிகர் ரஹீம் ஒரு அங்கமாக இருந்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை தோல்விகளை சந்தித்த போட்டிகளில் அங்கமாக இருந்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மோசமான சாதனையை ரஹீம் தற்போது தனதாக்கியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக இந்தியா தோல்வியை பதிவு செய்த 256 சர்வதேச போட்டிகளில் ஒரு அங்கமாக இருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல் (தோல்விகள்):
1. முஸ்பிகர் ரஹீம் (வங்கதேசம்) : 257*
2. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) : 256
3. மகிளா ஜெயவர்த்தனே (இலங்கை) : 249
4. கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) : 241
5. சனாத் ஜெயசூர்யா (இலங்கை) : 240
6. ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்) : 234

இதையும் படிங்க: பணத்தால் பாண்டியா மாதிரி.. மும்பை எல்லாரையும் வாங்க முடியாது? பதிரனா பதிவால் ஏற்பட்ட பரபரப்பு

இதை அறியும் இந்திய ரசிகர்கள் ரொம்ப தேங்க்ஸ் முஷி பாய் என்று அவருக்கு சமூக வலைதளங்களில் கலகலப்பான நன்றி தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இதே போட்டியில் தனது பேட்டில் பட்டு ஸ்டம்ப் மீது மோதுவதற்கு சென்ற பந்தை கையில் தடுத்ததால் ஃபீல்டிங்கை தடுத்ததற்காக அவுட்டான முதல் வங்கதேச வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement