பணத்தால் பாண்டியா மாதிரி.. மும்பை எல்லாரையும் வாங்க முடியாது? பதிரனா பதிவால் ஏற்பட்ட பரபரப்பு

Pathirana Pandya
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2015இல் தம்முடைய ஐபிஎல் பயணத்தை மும்பை அணியில் துவங்கிய பாண்டியா இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக உருவெடுத்தார்.

இருப்பினும் 2021க்குப்பின் ஃபார்மை இழந்த அவரை மும்பை கழற்றி விட்ட நிலையில் 15 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நம்பி நியமித்தது. அந்த வாய்ப்பில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த பாண்டியா அடுத்த வருடம் ஃபைனல் வரை குஜராத்தை அழைத்துச் சென்று அசத்தினார். அதனால் இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறிய அவர் இனிமேல் ஓய்வு பெறும் வரை குஜராத் அணியிலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பதிரான பதிவு:
குறிப்பாக கொல்கத்தாவுக்கு கங்குலி, மும்பைக்கு சச்சின், ரோஹித் போல தன்னுடைய சொந்த ஊரான குஜராத்துக்கு பாண்டியா கடைசி வரை விளையாடுவார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடைசி டிரேடிங் நாளின் மாலை 5.25 மணிக்கு குஜராத் தக்கவைத்த பாண்டியாவை இரவு 7.25 மணிக்கு மும்பை எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கியது. மறுபுறம் பாண்டியாவும் தம்முடைய சொந்த மாநிலம் மற்றும் கேப்டனாக உருவாக்கிய அணி என்பதையெல்லாம் மறந்து குஜராத்தை விட்டு மும்பைக்கு விளையாட சிரித்த முகத்துடன் சென்று விட்டார்.

இந்நிலையில் “எந்த பணத்தாலும் விசுவாசத்தை வாங்க முடியாது” என்று சென்னை அணிக்காக விளையாடி வரும் இளம் இலங்கை வீரர் மதிசா பதிரனா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி பாண்டியா போல இவரையும் வாங்குவதற்கு முயற்சித்திருக்கலாம் என்று சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

- Advertisement -

அதாவது 2010 – 2019 வரை மும்பையின் வெற்றிகளுக்கு இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்கா முக்கிய பங்காற்றியதை யாராலும் மறக்க முடியாது. தற்போது ஓய்வு பெற்ற அவரைப்போலவே ஸ்லிங்கா ஆக்சனுடன் பதிரனா பந்து வீசி சென்னையின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். எனவே பாண்டியா போல அவரையும் டிரேடிங் முறையில் வாங்குவதற்கு மும்பை முயற்சித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆர்.சி.பி வேணாம்னு வெளியேற்றிய அந்த வீரரை சி.எஸ்.கே கண்டிப்பா வாங்கும் – இர்பான் பதான் கணிப்பு

மேலும் அதற்கு தோனி மற்றும் சென்னை ஆகியோர் தமது கேரியரில் வளர்வதற்கு உதவிய விஸ்வாசத்தை மறந்து உங்கள் அணிக்கு வர முடியாது என்று சொல்ல விரும்புவதையே பதிரனா இப்படி பதிவிட்டு பதிலடியாக கொடுத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். சொல்லப்போனால் 2023இல் ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக இருந்த மலிங்காவை 2024 சீசனில் தங்கள் அணிக்கு வாங்கிய மும்பை பதிரனாவையும் வாங்குவதற்கு முயற்சித்திற்கும் என்றால் மிகையாகாது.

Advertisement