ஆர்.சி.பி வேணாம்னு வெளியேற்றிய அந்த வீரரை சி.எஸ்.கே கண்டிப்பா வாங்கும் – இர்பான் பதான் கணிப்பு

Irfan-Pathan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 2024-ல் 17-ஆவது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களின் ஏலமானது நடைபெற உள்ளது.

அதன்படி அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள வேளையில் இந்த ஐ.பி.எல் ஏலத்திற்கு 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -

மற்ற ஐபிஎல் ஏலத்தை காட்டிலும் இந்த ஐபிஎல் ஏலம் பெரிய சுவாரசியத்தை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போதுள்ள வீரர்கள் நிறைய பேர் அணிமாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளதால் இந்த ஏலமானது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் வெளியேறியுள்ளதால் 31 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கப்போகும் ஒரு வீரர் குறித்து பேசிய இர்பான் பதான் கூறுகையில் : பெங்களூரு அணியிலிருந்து ஒரு வீரர் நிச்சயம் சென்னை அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் சி.எஸ்.கே அணியில் தீபக்சாகர் போன்ற அடிக்கடி காயமடையும் பல வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். எனவே ஒரு நிலையான வீரர் அவர்களுக்கு அவசியம் தேவை.

இதையும் படிங்க : 69/6 என சரிந்த போது அவமானத்தை தகர்த்த கிளன் பிலிப்ஸ்.. 15 வருடத்துக்கு பின் வங்கதேசத்தில் சாதித்த நியூஸிலாந்து

அதன் காரணமாக ஹர்ஷல் படேலை சென்னை அணி ஏலத்தில் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை வெகு தொலைவில் இல்லை. எனவே 5 மணிநேர சிறிய சவாரியின் மூலம் ஹர்ஷல் பட்டேலை அவர்கள் அழைத்துச் செல்வார்கள் என்று நினைப்பதாக இர்பான் பதான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement