பந்து தாக்கி வலியால் துடித்த இந்திய வீரர். பேட்டிங் செய்யவும் இறங்கவில்லை

gill
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அதன்படி இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பாக அகர்வால் 150 ரன்களும், அக்சர் பட்டேல் 52 ரன்களும் குவித்தனர்.

நியூசிலாந்து அணி சார்பாக இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாற்று சாதனை புரிந்தார். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 62 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது ஆட்ட நேர முடிவில் 69 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது பீல்டிங் செய்த இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் நியூஸிலாந்து அணி வீரர் ஸ்வீப் செய்த பந்து தனது கையில் படவே அந்த அடியால் ஏற்பட்ட காயம் காரணமாக வலியில் துடிதுடித்தார். அதுமட்டுமின்றி தற்போது இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி பேட்டிங் செய்ய வரும் போதும் அவர் துவக்க வீரராக களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக புஜாரா அகர்வாலுடன் தற்போது விளையாடி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 10 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் படேல். அவரது இந்த சாதனையில் உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

கில்லுக்கு ஏற்பட்ட காயம் எந்த அளவிற்கு அவரை பாதித்துள்ளது என்ற தகவல் தெளிவாக வெளியாகவில்லை என்றாலும் அவருக்கு பதிலாக தற்போது புஜாரான இறங்கி விளையாடி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement