10 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் படேல். அவரது இந்த சாதனையில் உள்ள ஸ்பெஷல் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

ajaz-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை மைதானத்தில் நேற்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று இரண்டாம் நாளை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 325 ரன்கள் குவிக்க இந்த முதலாவது இன்னிங்சில் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

Ajaz 4

- Advertisement -

இந்த போட்டியில் 47.5 ஓவர்கள் வீசி அவர் 119 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்று உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் படேல் யார் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனது 8 ஆவது வயது வரை மும்பையில் பிறந்து வளர்ந்த அவர் அதன் பிறகு நியூசிலாந்தில் குடியேறி அந்நாட்டின் உள்ளூர் அணிக்காக விளையாடி வந்தார்.

ajaz 1

பின்னர் கிட்டத்தட்ட அவருக்கு 30 வயதாகும் போது 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போது 33 வயதில் நியூசிலாந்து அணிக்காக இந்த சாதனையை புரிந்துள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த ஒரு வீரர் தற்போது இந்திய அணிக்கு எதிராக அதே மும்பை மைதானத்தில் 10 விக்கெட் வீழ்த்தியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி முதல் வீரராக இவரைத்தான் தக்கவைக்கும். அவர் ரொம்ப முக்கியம் – ராபின் உத்தப்பா பேட்டி

இந்த சாதனையில் உள்ள ஸ்பெஷலே மும்பையில் பிறந்து வளர்ந்த வீரரான இவர் இந்திய அணிக்கு எதிராக அதே மும்பையில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது தான் சிறப்பான விடயமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement