சி.எஸ்.கே அணி முதல் வீரராக இவரைத்தான் தக்கவைக்கும். அவர் ரொம்ப முக்கியம் – ராபின் உத்தப்பா பேட்டி

CSK
- Advertisement -

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது நவம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட ஈடு வைக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 30ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

csk

- Advertisement -

அதில் முதல் நபராக ஜடேஜாவும், எம்.எஸ் தோனி இரண்டாவது நபராகவும் தக்கவைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து மொயின் அலி மற்றும் கடைசி வீரராக ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் தக்கவைக்கப்பட்டனர். இவர்கள் நால்வரைத் தவிர்த்து பல முக்கிய வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு மெகா ஏலத்திற்கு சென்றுள்ளனர். குறிப்பாக சென்னை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் டூபிளெஸ்ஸிஸ், பிராவோ, சின்ன தல சுரேஷ் ரெய்னா போன்றோர் மெகா ஏலத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை அணி தக்கவைத்த 4 வீரர்களுக்கு அடுத்து மெகா ஏலத்தில் யாரை முதலில் வாங்குவார்கள் என்பது குறித்து சென்னை அணியின் வீரரான ராபின் உத்தப்பா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணி தற்போது தக்க வைத்துள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பான வீரர்கள். என்னை பொருத்தவரை மெகா ஏலம் வரும்பொழுது ரெய்னா தான் சிஎஸ்கே அணியின் முதல் தேர்வாக இருப்பார்.

raina 1

ஏனெனில் சிஎஸ்கே அணியின் ஒரு முக்கிய அஸ்திரமாக ரெய்னா 10 முதல் 12 ஆண்டுகாலம் திகழ்ந்துள்ளார். அவரது பங்களிப்பு சிஎஸ்கே அணிக்கு அனைத்து ஆண்டுகளிலும் இருந்துள்ளது. அந்த வகையில் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி முதல் நபராக குறிவைக்கும் வீரராக ரெய்னா இருப்பார். அதோடு மட்டுமின்றி இன்னும் பல சிஎஸ்கே வீரர்களை மீண்டும் அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய – தென்னாபிரிக்க தொடர் ஒத்திவைப்பு. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு – அதிகாரபூர்வ தகவல்

டூபிளெஸ்ஸிஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட காரணம் யாதெனில் மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு வகையான செயல்பாட்டிலும் திருப்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவர் மீது நம்பிக்கை வைத்து ரீடெயின் செய்யப்பட்டுள்ளார். ஆனால் நிச்சயம் டூபிளெஸ்ஸிஸ் சிஎஸ்கே எனக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி மாத துவக்கத்தில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement