இந்திய – தென்னாபிரிக்க தொடர் ஒத்திவைப்பு. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு – அதிகாரபூர்வ தகவல்

Jay
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அந்த அணியுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

rsa 2

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஒன்பதாம் தேதி இந்தியாவிலிருந்து தென்ஆப்பிரிக்க புறப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த பயணத்திற்கு இந்திய அணி திட்டமிட்டபடி செல்லுமா ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தற்போது மிக வேகமாக பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர்ந்து நடைபெறுமா ? இந்திய அணி அங்கு பயணிக்குமா ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்திய பிசிசிஐ முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IND-vs-SA

அதன்படி இன்று நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறுகையில் : இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரானது ஓமைக்கிறான் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவிருந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்த – நியூசிலாந்து வீரர்

மேலும் இதுகுறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துடனும் பேச்சுவார்த்தையும் நடைபெற்று விட்டது என்றும் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரானது நிச்சயம் வேறொரு தேதியில் நிச்சயம் நடைபெறும் என்றும் பிசிசிஐ சார்பில் ஜெய்ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement