மும்பை டெஸ்ட் : ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்த – நியூசிலாந்து வீரர்

Ajaz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ஆம் தேதி நேற்று மும்பை மைதானத்தில் துவங்கியது. மழை காரணமாக இந்த போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்து இருந்தது. நேற்றைய போட்டியில் 4விழுந்த விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் வீழ்த்தியிருந்தார்.

ajaz 1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது ஆட்டம் நடைபெற்ற வேளையில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் மாயங்க் அகர்வால் 150 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இந்த முதல் இன்னிங்சில் மொத்தம் 47.5 ஓவர்கள் வீசிய அவர் 12 மெய்டன்களுடன் 119 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ajaz 2

அவரது இந்த சிறப்பான பந்து வீச்சின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அதன்படி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள லேக்கர் மற்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளே ஆகியோருடன் 10 விக்கெட் வீழ்த்திய சாதனையில் தற்போது இணைந்துள்ளார். கடைசியாக 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : வைரஸ் அச்சுறுத்தல் : திட்டமிட்டபடி தென்னாபிரிக்க தொடர் நடைபெறுமா ? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

இந்நிலையில் தற்போது இன்று நடைபெற்று வரும் மும்பை டெஸ்ட் போட்டியில் அஜாஸ் படேல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர் ஒருவர் இந்தியாவில் ஒரே இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டாகவும் இது அமைந்துள்ளது. அதோடு மட்டுமின்றி நியூசிலாந்து அணி சார்பாக ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement