வைரஸ் அச்சுறுத்தல் : திட்டமிட்டபடி தென்னாபிரிக்க தொடர் நடைபெறுமா ? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அந்த அணியுடன் மூன்று டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

rsa 2

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணி ஒன்பதாம் தேதி இந்தியாவிலிருந்து தென்ஆப்பிரிக்க புறப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த பயணத்திற்கு இந்திய அணி திட்டமிட்டபடி செல்லுமா ? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில் தென் ஆப்பிரிக்காவில் தற்போது மிக வேகமாக பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த தொடர்ந்து நடைபெறுமா ? இந்திய அணி அங்கு பயணிக்குமா ? என்ற சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்த தொடர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்திய பிசிசிஐ முக்கிய முடிவினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ind

அதன்படி இந்த தொடரை ரத்து செய்தால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் இழப்பு ஏற்படும் என்பதன் காரணமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்த தொடரில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்கா செல்லும் இந்திய வீரர்கள் கடுமையான பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளதால் இந்த தொடர் பாதுகாப்பாக நடைபெறும் என்பதை உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் பறிபோகவுள்ள ரஹானேவின் பதவி – புதிய துணைக்கேப்டன் யார் தெரியுமா ?

எனவே திட்டமிட்டபடி தென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என்றும் இந்த இந்தியா தென்னாபிரிக்கா தொடருக்கு பி.சி.சி.ஐ ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Advertisement