டெஸ்ட் போட்டிகளில் பறிபோகவுள்ள ரஹானேவின் பதவி – புதிய துணைக்கேப்டன் யார் தெரியுமா ?

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் இருந்ததால் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பி இருக்கும் வேளையில் ரஹானே காயம் காரணமாக என்ற இரண்டாவது போடியில் விளையாடாமல் வெளியே அமர்ந்துள்ளார்.

Rahane

- Advertisement -

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ரஹானே இதுவரை 79 போட்டிகளில் விளையாடி 4,795 ரன்களை குவித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே அயல்நாட்டு மண்ணிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ரன் குவிக்க தடுமாறி வரும் இவர் துணை கேப்டன் பதவியில் இருப்பதால் மட்டுமே அணியில் நீடிக்கிறார் என்றும் அந்த பதவி இல்லை என்றால் அணியில் இருந்து எப்போதோ வெளியேற்றப்பட்டு இருப்பார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்தனர்.

Rahane

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்த பிறகு இதுவரை மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வரும் ரஹானேவை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக புதிய வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : கவாஸ்கர் சொன்ன இந்த அறிவரை தான் என் சதத்திற்கு காரணம் – மாயங்க் அகர்வால் ஓபன்டாக்

அதன்படி தற்போது அடுத்ததாக நடைபெற இருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு புதிய துணைக்கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. இதன்காரணமாக ரஹானே நிச்சயம் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement