கவாஸ்கர் சொன்ன இந்த அறிவரை தான் என் சதத்திற்கு காரணம் – மாயங்க் அகர்வால் ஓபன்டாக்

Gavaskar
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. மழை காரணமாக 9:30 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி உணவு இடைவேளைக்குப் பின்னர் மதியம் 12 மணியளவில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக அருமையான தொடக்கத்தை பெற்றது.

gill

அணியின் எண்ணிக்கை 80 ரன்களில் இருந்தபோது 44 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சாஹா ஆகியோருடன் இணைந்த அகர்வால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் சதம் அடித்தார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் மாயங்க் அகர்வால் அடித்த நான்காவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாயங்க் அகர்வால் அடித்த இந்த சதம் குறித்து அவர் கூறுகையில் : இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் சுனில் கவாஸ்கர் என்னிடம் சில ஆலோசனைகளை கூறினார். அதன்படி நான் பேட்டிங் செய்ய நிற்கும் விதத்தை அவர் சற்று மாற்றி அமைக்க சொன்னார். ஏனெனில் நான் எப்போதுமே பேட்டை கொஞ்சம் உயர்த்தி பிடித்து விளையாடுபவன்.

agarwal

ஆனால் சுனில் கவாஸ்கர் சார் என்னிடம் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நீ துவக்கத்தில் பேட்டிங் செய்யும்போது பேட்டை சற்று கீழே வைத்தவாறு தான் விளையாட வேண்டும். அப்போதுதான் உன்னால் விக்கெட்டை இழக்காமல் விளையாட முடியும். பேட் சற்று மேலே இருக்கும் போது எளிதாக விக்கெட்டுகள் எதிரணிக்கு கிடைத்து விடும். எனவே டெஸ்ட் இன்னிங்சில் துவக்கத்தில் பேட்டை சற்று கீழே இறக்கி விளையாடுமாறு அவர் என்னிடம் தனது அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க : 132 வருஷத்துக்கு பின்னர் மும்பை டெஸ்டில் நடந்த அரிதான நிகழ்வு – சுவாரசிய தகவல் இதோ

அவரது இந்த அறிவுரையின்படி முதல் செஷன் முழுவதுமே பேட்டை சற்று கீழே இறக்கி கவனத்துடன் பந்துகளை எதிர்கொண்டேன். அதன் பின்னர் சில ஷாட்டுகள் எனக்கு சரியாக கனெக்ட் ஆக எனக்கு தன்னம்பிக்கை பிறந்தது. அதன் பின்னரே நான் சிறப்பாக விளையாடி இந்த முதல் நாள் ஆட்டத்தில் சதம் விளாசியதாக மாயங்க் அகர்வால் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement