132 வருஷத்துக்கு பின்னர் மும்பை டெஸ்டில் நடந்த அரிதான நிகழ்வு – சுவாரசிய தகவல் இதோ

INDvsNZ
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

rahane

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 132 ஆண்டு கால பழமையான சாதனையை தற்போது இந்த போட்டியின் மூலம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இணைந்து தகர்த்துள்ளனர்.

- Advertisement -

இந்த சாதனை குறித்த அரிதான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி 1889 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளுக்கு 4 கேப்டன்கள் செயல்பட்டு இருந்தனர். அதற்கு அடுத்து 132 ஆண்டு காலத்திற்கு பிறகு தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் மூலம் மீண்டும் நிகழ்ந்துள்ளது.

latham

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 4 கேப்டன்கள் செயல்பட்டுள்ளனர். இந்த 132 ஆண்டு கால சாதனை விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டார். அதேபோன்று நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்சன் செயல்பட்டார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு இவரும் ஒரு முக்கியமான வீரர். கண்டிப்பா அவரையும் நாங்க வாங்குவோம் – காசி விஸ்வநாதன்

இரண்டாவது போட்டியில் கோலியின் வருகையால் ரஹானே வெளியே அமர வைக்கப்பட்டார். இதனால் கோலி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேபோன்று நியூசிலாந்து அணி சார்பாக வில்லியம்சன் காயம் அடைந்ததால் டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்ற விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement