பேவரைட் ஷாட்டால் வந்த வினை.. சுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம். – பைனல் மேட்ச்ல இப்படியா நடக்கனும்?

Gill
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியின் துவக்க வீரர்களாக வழக்கம் போலவே ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே வந்த வேளையில் இரண்டாவது ஓவரின் போது ரோகித் சர்மா அதிரடியாக இரண்டு பவுண்டரிகளை பறக்க விட இரண்டு ஓவர்களின் முடிவில் இந்திய அணி 13 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மூன்றாவது ஓவரில் ஐந்து ரன்கள் வர நான்காவது ஓவரின் போது ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என வழக்கம் போல ரோகித் சர்மா அதிரடி காட்டிய பின்னர் அணியின் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதிலும் குறிப்பாக அவர் வழக்கமாக விருப்பப்பட்டு விளையாடும் பேவரைட் ஷாட் மூலமே அவர் இந்த போட்டியில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதோடு அகமதாபாத் மைதானம் கில்லுக்கு ராசியான மைதானம் என்று பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் அவர் ஏற்கனவே அகமதாபாத் மைதானத்தில் சதம் அடித்திருந்த வேளையில், சர்வதேச போட்டியிலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அகமதாபாத் மைதானத்தில் சதம் அடித்திருந்தார். இப்படி அவருக்கு ராசியான இந்த மைதானத்தில் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சுப்மன் கில் இப்படி வெறும் 4 ரன்களுக்கே ஆட்டம் இழந்து வெளியேறியது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : 151.61 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டல் துவக்கம்.. வில்லியம்சன், கெயிலை முந்திய ரோஹித்.. ஆஸிக்கு எதிராக 2 உலக சாதனை

இருப்பினும் அதனை தொடர்ந்து இந்திய அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதுவரை ஸ்டார்க் மற்றும் கில் ஆகியோருக்கு இடையே இதுவரை சுப்மன் கில் ஸ்டார்க்கிற்கு எதிராக நான்கு முறை விளையாடி 45 பந்துகளில் 38 ரன்கள் குவித்துள்ள வேளையில் மூன்று முறை அவர் ஆட்டமிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று விக்கெட்டுகளுமே 15 ஓவர்களுக்குள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement