151.61 ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டல் துவக்கம்.. வில்லியம்சன், கெயிலை முந்திய ரோஹித்.. ஆஸிக்கு எதிராக 2 உலக சாதனை

Rohit Sharma 47.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக வித்தியாசமான முடிவை அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் ஆரம்பத்திலேயே 4 ரன்களில் ஸ்டார்க் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனாலும் மறுபுறம் இத்தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடுவதை போல அசத்திய கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய பாணியில் விளையாடி வேகமாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

இரட்டை உலக சாதனை:
குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 47 (31) ரன்களை 151.61 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இந்த 3 சிக்சர்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 86 சிக்ஸர்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 85 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 86*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
2. கிறிஸ் கெயில் : 85, இங்கிலாந்துக்கு எதிராக
3. ஷாஹித் அப்ரிடி : 63, இலங்கைக்கு எதிராக
4. சனாத் ஜெயசூர்யா : 53, பாகிஸ்தானுக்கு எதிராக
5. சாகித் அப்ரிடி : 51, இந்தியாவுக்கு எதிராக

- Advertisement -

அத்துடன் இந்த தொடரில் 597 ரன்கள் அடித்துள்ள அவர் ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற கேன் வில்லியம்சன் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 597 (2023)*
2. கேன் வில்லியம்சன் : 578
3. மகிளா ஜெயவர்த்தனே : 548 (2007)
4. ரிக்கி பாண்டிங் : 539 (2007)
5. ஆரோன் பின்ச் : 507 (2019)

இதையும் படிங்க: நிறைய வேலை இருந்துருக்கும் விடுங்க.. கபில் தேவ் ஆதங்கம்.. பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் ராகுல் 66, விராட் கோலி 54 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 50 ஒவர்களில் இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement