நிறைய வேலை இருந்துருக்கும் விடுங்க.. கபில் தேவ் ஆதங்கம்.. பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

Kapil Dev
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்வதற்காக விளையாடின. முன்னதாக அப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இதுவரை உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டன்களை நேரில் அழைத்து ஸ்பெஷல் பிளேசரை அணிவித்து பிசிசிஐ கௌரவிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

அதனால் கபில் தேவ், எம்எஸ் தோனி ஆகிய முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அந்த சூழ்நிலையில் ஏபிபி எனும் ஊடகத் தொலைக்காட்சியில் உலகக்கோப்பை ஃபைனல் போட்டிக்காக பிரத்தியேகமாக பேட்டி கொடுக்க கபில் தேவ் வந்திருந்தார். அப்போது நீங்கள் ஃபைனல் போட்டியை பார்ப்பதற்கு நேராக செல்லவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

விளாசும் ரசிகர்கள்:
அதற்கு பிசிசிஐ தங்களை அழைக்கவில்லை என்று தெரிவித்த கபில் தேவ் ஒருவேளை அவர்கள் அழைப்பு விடுத்திருந்தால் 1983 உலக கோப்பை அணியினரை மொத்தமாக அழைத்துக்கொண்டு ஃபைனலுக்கு செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்ததாக கூறினார். இருப்பினும் ஃபைனலில் நிறைய வேலைகள் இருப்பதால் அவர்கள் தங்களை மறந்திருக்கலாம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்த கபில் தேவ் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“நீங்கள் என்னை அழைத்தீர்கள். அதனால் நான் இங்கே வந்தேன். பிசிசிஐ என்னை அழைக்கவில்லை. அதனால் நான் அங்கே செல்லவில்லை. இருப்பினும் நான் 1983 உலகக்கோப்பை அணி அங்கே இருப்பதை விரும்பினேன். ஆனால் அங்கு நிறைய வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய பொறுப்புகள் இருந்திருக்கலாம். அது போன்ற சூழ்நிலையில் சிலர் மறந்திருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இதை பார்க்கும் ரசிகர்கள் இன்று இந்தியாவில் கிரிக்கெட் ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு 1983 உலகக் கோப்பையை வென்று முதல் விதையை ஆழமாக போட்ட முன்னாள் கேப்டனுக்கு அழைப்பு விடுக்க மறந்து விட்டீர்களா அல்லது நேரமில்லையா என்று ஜெய் ஷா தலைமையிலான பிசிசிஐ நிர்வாகத்தை விளாசி வருகின்றனர். அதை விட ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் போன்ற சினிமா நடிகர்களுக்கு ஜெய் ஷா ஆரம்பத்திலேயே தங்க டிக்கெட் வழங்கி உலகக்கோப்பை ஃபைனலை காண அழைப்பு விடுத்திருந்தார்.

இதையும் படிங்க: இறுதிப்போட்டியின் டாஸிற்கு பிறகு அதிரடி முடிவை கையில் எடுத்த ரோஹித் சர்மா – இந்திய அணி முதலில் பேட்டிங்

இருப்பினும் அவர் கபில் தேவுக்கு அந்த டிக்கெட்டை வழங்க புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை. இதிலிருந்து அவருக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்படாததும் தெரிய வருகிறது. அதனால் கோபமடையும் ரசிகர்கள் எவ்வளவு உயரம் சென்றாலும் பழையவற்றை மறக்காதீர்கள் என்று பிசிசிஐ நிர்வாகிகளை விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement