- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சாதனையை நிகழ்த்திய சுப்மன் கில்.. ஐ.சி.சி வெளியிட்ட தகவல் – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது துவங்கும் முன்னர் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் :

அந்த வகையில் ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி இந்திய அணியின் துவக்க வீரரும், துணை கேப்டனுமான சுப்மன் கில் முதலிடத்தினை பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

கடந்த வாரம் வெளியான தரவரிசை பட்டியலில் சுப்மன் கில் இரண்டாவது இடம் பிடித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் விளாசிய அவர் தற்போது 796 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே வேளையில் முத்தரப்பு தொடரில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 776 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் சதம் அடித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் கிளாஸன் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -

அதேபோன்று நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டேரல் மிட்சல் தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளார். அதேபோன்று இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இப்படி சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் முதல் 10 இடங்களில் 3 வீரர்களாக இடம்பிடிக்க நான்காவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் 629 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க : அவர்மேல் சந்தேகமே இல்ல.. பாபர் அசாம் தான் அதை செய்வாரு – பாக் கேப்டன் முகமது ரிஸ்வான் கருத்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கும் வேளையில் இந்திய அணியை சேர்ந்த 4 பேட்ஸ்மேன்கள் இப்படி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருப்பது இந்திய அணியின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -