ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது இன்று கராச்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்து தற்போது பந்துவீசி வருகிறது.
பாபர் அசாமின் ரோல் இதுதான் : முகமது ரிஸ்வான்
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான யுத்தத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமெனில் அந்த அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் சிறப்பான ஃபார்மிற்கு திரும்ப வேண்டியது அவசியம். ஏனெனில் நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக பார்க்கப்பட்ட பாபர் அசாம் கடந்த பல மாதங்களாக மோசமான பேட்டிங் பார்மால் தடுமாறி வருகிறார்.
சமீபத்தில் அவர் விளையாடிய தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கடைசியாக 21 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் ஏமாற்றம் அளித்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன் டிராபி தொடரில் அவர் துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் அவரின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை என்றும் தற்போதைய கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பாபர் அசாம் கேப்டனாக இருந்தபோது நாங்கள் ஒருமுறை ஐசிசி தொடரின் அரையிறுதிக்கும், ஒருமுறை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளோம். எனவே அவரின் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. இந்த முறை அந்தக் குறையையும் பூர்த்தி செய்து சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிப்போம்.
பாபர் அசாம் எங்களது அணியின் துவக்க வீரராக தான் களமிறங்குவார். எங்களிடம் துவக்க வீரர்களுக்கான இடத்திற்கு நிறைய பேர் போட்டியில் இருந்தாலும் பாபர் அசாம் அதற்கு மிகச் சிறந்த தேர்வாக இருப்பார் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : இந்திய அணியில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க புதிய முயற்சியை கையிலெடுத்த ஷர்துல் தாகூர் – விவரம் இதோ
ஏனெனில் அவரது பேட்டிங் டெக்னிக் நிச்சயம் அணியை பெரிய ரன் குவிப்புக்கு அழைத்துச் செல்லும். எனவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் அந்த பணியை தான் செய்வார் என ரிஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.



