இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த ஷர்துல் தாகூர் கடந்த சில தொடர்களாகவே இளம் வீரர்களின் வருகை காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். இருந்தாலும் தான் இந்திய அணியில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பேன் என்று கூறி உள்ளூர் கிரிக்கெட்டில் முழு கவனத்தை செலுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஷர்துல் தாகூர் எடுத்துள்ள புதிய முடிவு :
அந்த வகையில் தற்போது மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான ரஞ்சி தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் மும்பை அணி விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.
அதேபோன்று மற்றொரு போட்டியில் கேரளா மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் இந்த ரஞ்சி டிராபி முடிந்த கையோடு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட ஏற்கனவே ஷர்துல் தாகூர் முடிவெடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இவ்வேளையில் தற்போது அவர் கவுண்டி தொடரில் விளையாடுவது உறுதியானது மட்டுமின்றி எந்த அணிக்காக அவர் விளையாட இருக்கிறார் என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் எதிர்வரும் கவுண்டி தொடரில் எஸ்ஸக்ஸ் அணிக்காக ஷர்துல் தாகூர் ஒப்பந்தமாகியுள்ளார். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் இந்த கவுண்டி தொடரில் 7 போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார்.
இந்த கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த கோடை காலத்தில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதனாலே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்திய அணியை சேர்ந்த பல வீரர்கள் இதேபோன்று கவுண்ட் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி வரும் வேளையில் தற்போது முதல் முறையாக ஷர்துல் தாகூர் இந்த முடிவினை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : பும்ராவின் இடத்தை திறமையான ராணாவை விட அர்ஷ்தீப் நிரப்ப சரியானவர்.. காரணம் இது தான்.. பாண்டிங் பேட்டி
எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி அங்கு நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அந்த அணியில் இடம் பிடிக்கவே அவர் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



