- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs AUS : திறமை, டெக்னிக் எல்லாமே கச்சிதமாக இருக்கு, ஈஸியா 15000 ரன்கள் அடிப்பாரு – இளம் இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் வென்றாலும் 3வது போட்டியில் தோற்ற இந்தியா மார்ச் 9ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்த நிலையில் இந்தியாவும் 350+ ரன்களை கடந்து அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 128 ரன்கள் குவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று 2019ஆம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய அவர் 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதன் பின் 2022 ஐபிஎல் தொடரில் முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து அசத்திய அவர் இந்திய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

சிறப்பான டெக்னிக்:
அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதுகளை வென்று வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் கடந்த டிசம்பர் மாதம் வங்கதேச மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரிலும் சதமடித்து அசத்தினார். அதை விட கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இரட்டை சதமும், சதமும் அடித்த அவர் இத்தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது விமர்சனங்கள் எழுப்பியது.

அதனால் கேஎல் ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவர் தற்போது அடித்துள்ள இந்த சதத்தையும் சேர்த்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே காலண்டர் வருடத்தில் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அதனால் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் ஆகியோரது வரிசையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தப்போகும் இந்திய பேட்டிங்கின் வருங்கால சூப்பர் ஸ்டாராக அறியப்படும் அவருடைய டெக்னிக் மிகச் சிறப்பாக இருப்பதால் நிச்சயமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 – 15000 ரன்களுக்கும் மேல் அடிக்க முடியும் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சுப்மன் கில்லை அருகில் வைத்துக் கொண்டே நேரடியாக அவர் பாராட்டி பேசியது பின்வருமாறு. “அவரிடம் நிறைய டைமிங் உள்ளது. குறிப்பாக டிஃபன்ஸ் ஷாட் அடிக்கும் போது மிட்சேல் ஸ்டார்க் போன்ற பவுலர்களுக்கு எதிராக கூட அவர் குனிந்தவாறு முன்னோக்கி சென்று பேட்டின் முகத்தை நேராக வைத்து பந்தை தடுப்பதை பார்ப்பது ஆனந்தத்தை கொடுக்கிறது. அது அவரிடம் எவ்வளவு தன்னம்பிக்கை இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. மேலும் அவர் பின்னங்காலில் மட்டும் விளையாடவில்லை”

“அவருடைய கால்கள் முன்னோக்கி நகர்வதால் அவரிடம் திடமான அட்டாக் மற்றும் திடமான டிஃபன்ஸ் செய்யும் டெக்னிக் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இது உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முன்னும் பின்னுமாக நகர்வது அவ்வளவு எளிதானதல்ல. அதே சமயம் அவர் லென்த்தை சரியாகப் பிடிக்கிறார். எனவே அவருடைய கேரியரை சரியான கோணத்தில் செலுத்தும் பட்சத்தில் அவரால் எளிதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000, 10000, 15000 ரன்கள் வரை அடிக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:வீடியோ : 36 பந்தில் சதம் – கிறிஸ் கெயில் உலக சாதனையை உடைத்த பாக் வீரர் – உலக சாதனை படைத்த பிஎஸ்எல் போட்டி

அவர் கூறுவது போல இந்த இளம் வயதிலேயே உலகின் தரமான பவுலரான மிட்சேல் ஸ்டார்க்க்கு எதிராக ஒருமுறை கூட அவுட்டாகாமல் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரராக சுப்மன் கில் சாதனை படைத்துள்ளார். அதற்கு இயற்கையாகவே அவரிடம் இருக்கும் நல்ல டெக்னிக் காரணமாக அமைவதால் நிச்சயம் 10000க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -