IPL 2023 : மும்பையின் 6வது கோப்பை கனவை உடைத்த சுப்மன் கில் – சேவாக், விராட் கோலியை மிஞ்சி 3 மாஸ் வரலாற்று சாதனை

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 26இல் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் வெற்றிகரமான மும்பையை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மே 28இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் சென்னையை எதிர்கொள்ள தகுதி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 233/3 ரன்கள் சேர்த்து வெற்றி ஆரம்பத்திலேயே உறுதி செய்தது.

அதிகபட்சமாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் தொடக்க வீரர் சுப்மன் கில் மும்பை பவுலர்களை புரட்டி எடுத்து 7 பவுண்டரி 10 சிக்சருடன் இந்த சீசனில் 3வது சதமடித்து 129 (60) ரன்களும் தமிழக வீரர் சாய் சுதர்சன் 43 (31) ரன்களும் கேப்டன் பாண்டியா 28* (13) ரன்களும் எடுத்தனர். அதைத் துரத்திய மும்பை குஜராத்தின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே பதற்றுத்துடன் பேட்டிங் செய்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 18.2 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இத்தொடரில் இருந்து வெளியேறி 6வது கோப்பையை வெல்லும் கனவை நிஜமாக்கத் தவறியது.

- Advertisement -

சாதனை பட்டியல்:
குறிப்பாக சூரியகுமார் யாதவ் 61 (38), திலக் வர்மா 43 (14) என நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் அதிரடியாக ரன்களை எடுத்தும் கேப்டன் ரோகித் சர்மா 8 (7) டிம் டேவிட் 2 (3) என இதர முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வியை சந்தித்த அந்த அணியை அபாரமாக பந்து வீசிய சுருட்டிய குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு சந்தேகம் என்று சதமடித்த முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற கில் இப்போட்டியில் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்:

1. இப்போட்டியில் வெறும் 49 பந்துகளில் சதமடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் 2022 சீசனில் லக்னோவுக்கு எதிரான எலிமினேட்டரில் பெங்களூரு வீரர் ரஜத் படிடார் மற்றும் 2014 ஃபைனலில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக ரிதிமான் சஹா ஆகியோர் தலா 49 பந்துகளில் சதமடித்துள்ளனர்.

- Advertisement -

2. மேலும் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் (129) பதிவு செய்த குஜராத் வீரர் என்ற தனது சொந்த சாதனையை (104*) முறியடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையையும் தூளாக்கினார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் (குஜராத்) : 129, மும்பைக்கு எதிராக, 2023*
2. வீரேந்திர சேவாக் (பஞ்சாப்) : 122, சென்னைக்கு எதிராக, 2014
3. ஷேன் வாட்சன் (சென்னை) : 117*, ஹைதராபாத்துக்கு எதிராக, 2018

2. அத்துடன் 10 சிக்ஸர்களை விளாசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளே ஆப் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வீரேந்திர சேவாக் சாதனையும் உடைத்த புதிய வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 10, மும்பைக்கு எதிராக, 2023*
2. விரேந்தர் சேவாக் : 8, சென்னைக்கு எதிராக, 2014
3. ரிதிமான் சஹா : 8, கொல்கத்தாவுக்கு எதிராக, 2014
4. கிறிஸ் கெயில் : 8, ஹைதராபாத்துக்கு எதிராக, 2016
5. ஷேன் வாட்சன் : 8, ஹைதராபாத்துக்கு எதிராக, 2018

- Advertisement -

3. அதை விட 101, 104, 49, 129 என கடந்த 5 இன்னிங்ஸில் 383 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் 4 தொடர்ச்சியான இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன் கடந்த 2016இல் விராட் கோலி 4 இன்னிங்ஸில் அதிகபட்சமாக 351 ரன்கள் எடுத்திருந்தார்.

4. அது போக ஐபிஎல் தொடரில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக சதங்கள் அடித்த 2வது வீரர் என்ற ஜோஸ் பட்லர் (தலா 3) சாதனையும் அவர் சமன் செய்தார். முதல் இடத்தில் விராட் கோலி (4, 2016இல்) உள்ளார்.

இதையும் படிங்க:GT vs MI : வெற்றிகரமான மும்பையை வீட்டுக்கு ஓடவிட்டு ஃபைனலில் சிஎஸ்கே’வை எச்சரிக்கும் குஜராத் – மீண்டும் கோப்பை வெல்லுமா?

5. அப்படி மும்பையை வெளுத்து வாங்கி இந்த சீசனில் மொத்தமாக 851 ரன்கள் அடித்துள்ள அவர் பஃப் டு பிளேஸிஸை மிஞ்சி அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்று ஆல் டைம் பட்டியலில் விராட் கோலி (973, 2016இல்) ஜோஸ் பட்லர் (863, 2022இல்) ஆகியோருக்கு பின் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement