GT vs MI : வெற்றிகரமான மும்பையை வீட்டுக்கு ஓடவிட்டு ஃபைனலில் சிஎஸ்கே’வை எச்சரிக்கும் குஜராத் – மீண்டும் கோப்பை வெல்லுமா?

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 26ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. குறிப்பாக சென்னையிடம் குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியை சந்தித்த குஜராத் எலிமினேட்டரில் லக்னோவை வீட்டுக்கு அனுப்பி வைத்த மும்பையை ஃபைனலுக்கு தகுதி பெறும் 2வது வாய்ப்பில் சந்தித்தது. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு 54 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக செயல்பட்ட ரித்திமான் சஹா 18 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

ஆனால் மறுபுறம் பவர் பிளே ஓவர்களில் மும்பையை வெளுத்து வாங்கிய சுப்மன் கில் அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் செய்து விரைவாக ரன்களை சேர்த்தார். அதில் சாய் சுதர்சன் கம்பெனி கொடுக்கும் வகையில் மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஏற்கனவே இந்த சீசனில் 2 சதங்களை அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் கில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று ஓவருக்கு 10 ரன்களை குவித்து அதிரடியாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

மாஸ் வெற்றி:
குறிப்பாக கடந்த போட்டியில் 5 ரன்னுக்கு 5 விக்கெட் எடுத்த ஆகாஷ் மாத்வால் உட்பட அனைத்து பவுலர்களையும் எடுத்து வாங்கிய அவர் 2வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த சீசனில் 3வது சதத்தை விளாசி 7 பவுண்டரி 10 சிக்ஸ்ருடன் 129 (60) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மெதுவாக விளையாடிய சுதர்சன் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 43* (31) ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட்டாகி செல்ல இறுதியில் கேப்டன் பாண்டியா 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 28* (13) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் குஜராத் 233/3 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து 234 ரன்களை துரத்திய மும்பைக்கு முதல் ஓவரிலேயே இம்பேக்ட் வீரராக வந்த நேஹல் வதேராவை 4 (3) ரன்களில் அவுட்டாக்கிய ஷமி தன்னுடைய அடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய கேப்டன் ரோகித் சர்மாவையும் 8 (7) ரன்களில் காலி செய்தார். அதனால் 21/2 என தடுமாறி அந்த அணியை 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய திலக வர்மா அதிரடியாக 5 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (14) ரன்களை தெறிக்க விட்டு ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் காயத்துடன் போராடிய கேமரூன் கிரீன் 30 (20) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அவர்களைப் போலவே நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தனது பங்கிற்கு அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 61 (38) ரன்கள் குவித்து போராடிய போதிலும் இலக்கு பெரியதாக இருந்த அழுத்தத்தில் அவுட்டாகி செல்ல விஸ்ணு வினோத் 5 (7) டிம் டேவிட் 2 (3) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18.2 ஓவரிலேயே மும்பையை 171 ரன்களுக்கு சுருட்டி 62 ரெண்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளையும் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முன்னதாக இப்போட்டிக்கு முன்பாங்க மழை பெய்ததால் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்த கேப்டன் ரோகித் சர்மா முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது தோல்விக்கு காரணமானது. ஏனெனில் சேப்பாக்கம், லக்னோவில் வேண்டுமானால் அது போல மழை பெய்தால் பிட்ச் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக மாறும். ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே பேட்டிங் சாதகமாக இருந்து வரும் அகமதாபாத் மைதானத்தில் அவருடைய கணிப்பு தவறான நிலையில் உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு எதிராக மும்பை பவுலர்கள் மோசமாக பந்து வீசியது பாதி வெற்றியை முடித்தது.

மீதி வெற்றி அழுத்தமான நாக் அவுட் போட்டியில் 234 ரன்களை சேசிங் செய்ய வேண்டும் என்ற பதற்றத்தில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் விளையாடியதிலேயே பறிபோனது. அதனால் 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மும்பையின் கனவை அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு உடைத்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்காக மே 28இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலில் இதே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னையை எதிர்கொள்கிறது.

Advertisement